Monday, May 25, 2026

மலேசிய சைவ நற்பணிக்கழகச் சொற்பொழிவு நாளை!

Made with LogoLicious Add Your Logo App

மலேசிய சைவ நற்பணிக் கழகத்தின் சார்பில் திங்கள்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் தமிழ்ச் சைவ சமயச் சொற்பொழிவு இம்முறை நாளை 10.5.2026 ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூர், துன் சம்பந்தன் மாளிகை, டான்ஸ்ரீ சோமா அரங்கில், காலை மணி 9.30 அளவில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் மலேசிய சைவ நற்பணிக் கழகத்தின் துணைத்தலைவர் திருமுறைச் செல்வி, சைவ சித்தாந்த இரத்தினம் நிறைமலி நிர்மலாதேவி தர்மலிங்கம், ‘திருமந்திரத்தின் வழி வள்ளுவம் காட்டும் அன்புநெறி’ என்னும் தலைப்பில் உரை நிகழ்த்த உள்ளார்.

தொடர்ந்து, கழகத்தின் தலைவர் திருமுறைச் செம்மல் முனைவர் தர்மலிங்கம் நடராசன், திருமந்திரத்தில் இரண்டாம் தந்திரம் பகுதி 2-222னும் தலைப்பில் உரையாற்றுவார். அரிய சமய உண்மைகளையும் வாழ்வியல் கூறுகளையும் அறிவதற்கும் அதனைப் பின்பற்றுவதற்கும் இந்நிகழ்ச்சி வாய்ப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை!

சிந்தனைக்கும் செயலுக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளிக்கக்கூடிய இந்நிகழ்ச்சியில் தமிழ்ச் சைவ சமய ஆர்வலர்கள் தமிழர் பண்பாட்டு உடையில் தங்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டு பயன் அடைய அழைக்கப்படுகிறார்கள்.

இலவயமாக நடத்தப்பெறும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அன்பர்களுக்கு மதிய உணவும் வழங்கப்படும். கூடுதல் தெரிவலுக்கு 0123277061 அல்லது 0122340470 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். மின்னஞ்சல் தொடர்புக்கு darmamsnk@yahoo.com.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை