Wednesday, May 13, 2026

மித்ரா’விற்கு கூடுதலாக வெ.50 மில்லியனாம்: பிரதமரின் படம் காட்டும் வேலையும் பம்மாத்துக் கூத்தும் தொடர்கின்றன! -பொன்.வேதமூர்த்தி காட்டம்

மலேசிய இந்திய சமூக-பொருளாதார உருமாற்றப் பிரிவிற்கு கூடுதலாக 50 மில்லியன் வெள்ளி ஒதுக்கப்படுவதாக அறிவிப்பு செய்திருப்பது வெறும் படம் காட்டும் வேலையென்றும் பச்சையான பம்மாத்துக்கூத்து என்றும் மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி தலைவர் பொன்.வேதமூர்த்தி சாடியுள்ளார்.

கடந்த 2025-ஆம் ஆண்டில் மித்ரா நிதி வெ.100 மில்லியனைக் கொண்டு, மலேசிய இந்திய சமுதாயத்திற்காக என்ன உருமாற்றம் நிகழ்த்தப்பட்டது என்று எந்த விவரமோ விளக்கமோ இல்லை; அதைப்போல 2024-ஆம் ஆண்டிலும் மித்ராவினால் இந்திய சமுதாயம் அடைந்த பயன் என்னவென்று தெரியவில்லை.

இந்த நிலையில், மலேசிய இந்திய சமூகம் தன்மீதும், தான் வழிநடத்தும் அரசுமீதும் நம்பிக்கை இன்றி இருக்கின்றனர் என்பதை அறிந்து, பிரதமர் அன்வார் இப்ராகிம், மித்ரா அமைப்புக்கு கூடுதலாக வெ.50 மில்லியனை ஒதுக்குவதாக அறிவித்துள்ளர். இது, வெறும் அறிவிப்பு மட்டுமே என்று ஹிண்ட்ராஃப் தலைவருமான பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கோயில் விவகாரத்தில் இந்தியர்களை, குறிப்பாக இந்து சமூகத்தை அவமதித்து- சிறுமைப்படுத்தியதால் அரசுமீதும், அதைவிட அன்வார்மீதும் மக்கள் கொண்டுள்ள வெறுப்பையும் ஆதங்கத்தை யும் மடைமாற்றுவதற்காக இந்த வெற்று அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

13-ஆவது மலேசிய பெருந்திட்டத்தில் இந்திய சமுதாயத்திற்கு ஏதாவது சிறப்புத் திட்டத்தை நிறைவேற்றும்படி 20-க்கும் மேற்பட்ட கடிதங்களை அனுப்பியும் அதற்கெல்லாம் பதில் சொல்லாத அன்வார், இப்பொழுது மித்ராவுக்கு 50 மில்லியன் வெள்ளியை கூடுதலாக ஒதுக்குவதாக அறிவித்து, அறிக்கைகளின் மூலமே இந்திய சமுதாயத்தை வஞ்சிக்கப் பார்க்கிறார் என்று சட்ட வல்லுநருமான பொன்.வேதமூர்த்தி இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை