
தமிழகத்தின் தலைநகரம் சென்னையின் கிழக்குக் கடற்கரை சாலையில், முட்டுக்காட்டுப பகுதியில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் ( கலைஞர் நூற்றாண்டு மாநாட்டு அரங்கம்) அமைப்பதற்கு தமிழ்நாட்டு சுற்றுச்சூழல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.
இந்திய நாணயம் ஏறக்குறைய 525 கோடி மதிப்பில் இந்தத் திட்டம் வரையப்பட்டுள்ளது.
5,000 இருக்கைகள் கொண்ட மாநாட்டுக் கூடம், 10,000 பேர் பார்வையிடும் வசதி கொண்ட கண்காட்சி அரங்கம், கூட்ட அரங்குகளுக்கான கட்டமைப்பு உள்ளிட்ட வசதியைக் கொண்டிருக்கும் இந்தப் பன்னாட்டு அரங்கத்தில் திறந்தவெளி மண்டபமும் உணவு விடுதிகளும்கூட இடம்பெற்றுள்ளன; ஏறக்குறைய 10,000 வாகனங்களை நிறுத்தும் வசதியும் இதில் இணைக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை இந்த ஆண்டிற்குள் நிறைவுபெறாவிட்டால், 2026-ம் ஆண்டின் தொடக்கத்திலாவது கலைஞர் பன்னாட்டு அரங்க கட்டுமான பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதேவேளை, இத்திட்டத்திற்கு, கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணையம் இன்னும் அனுமதி வழங்கவில்லை. இந்த அனுமதி கிடைத்தவுடன் கலைஞர் பன்னாட்டு அரங்கத்திற்கான கட்டுமானப் பணிகளை அதிரடியாக முடுக்கிவிட தமிழ் நாட்டுப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனராம்.


