Saturday, May 30, 2026

80-ஆம் ஆண்டில் மஇகா! நாடு முழுவதும் கூட்டுப் பிரார்த்தனை!!

மெர்டேக்காக் காலத்தில் துளிர்த்து சுதந்திர மலேசியாவில் ஆல்போல் தழைத்து நாடெங்கும் விழுது விட்டுள்ள மஇகா என்பதாம் ஆண்டில் பயணிப்பதை முன்னிட்டு இன்று மே 21ஆம் நாள் நாடு முழுவதும் ஏராளமான இடங்களில் மஇகா சார்பில் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், மஇகா தேசிய தலைமையகத்தின் சார்பில் மஇகா முதன் முதலில் 1946-இல் எந்த இடத்தில் முளைவிட்டதோ அதே இறை இறையிடத்தில் மஇகா தேசியத் தலைவர் தான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் தலைமையில் இப்பொழுது கூட்டுப் பிரார்த்தனை நடைபெறுகிறது.

மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ மு சரவணன், தேசிய உதவித் தலைவர்களான டத்தோ அசோகன், டத்தோ முருகையா மாநில தலைவர் தான்ஸ்ரீ இராமசாமி, முன்னாள் உதவி தலைவர்களில் ஒருவரான தான்ஸ்ரீ க. குமரன், பொதுச்செயலாளர் டத்தோ ஆனந்தன், நிர்வாக செயலாளர் டத்தோ டாக்டர் ஏ டி குமார ராஜா, தேசிய ஊடகப்பிரிவு தலைவர் எல் சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட ஏராளமான தலைவர்களும் கட்சியினரும் கோலாலம்பூர் அருள்மிகு மாரியம்மன் ஆலயத்தில் ஒருங்கே குழுமியுள்ளனர்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை