Sunday, May 31, 2026

நம் குடும்பம்- மஇகாவின் பலம்

இல. சிவசுப்பிரமணியம்

கோலாலம்பூர், மே. 30- மஇகாவின் 80ஆம் ஆண்டு நிறைவு விழா தற்போது நாடு தழுவிய நிலையில் நடைபெற்று வருகிறது.

கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் தலைமைத்துவத்தில் சீரும் சிறப்புமாய் நடைபெற்றுக் கொண்டிருப்பது வரலாற்றுப்பூர்வமானதாகும்.

ஆலயங்களில் கூட்டுப் பிரார்த்தனைகள் நடந்து முடிந்தப் பின்னர் தற்போது குடும்ப தின விழாவை நோக்கி கட்சி நகர்கிறது.

நம் குடும்பம் – மஇகாவின் பலம் எனும் கருப்பொருளுடன் நாடு முழுவதும் வரும் மே 31ஆம் நடைபெறுகிறது.

குடும்ப தின விழா, ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தும் விழாவாக அமைகிறது.

குடும்பத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும் உறவுகளை மேம்படுத்தவும் ஆண்டுதோறும் குடும்ப தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் குடும்பத்தினருடன் அன்பைப் பகிர்வது, ஒன்றுகூடி உணவருந்துவது போன்ற கொண்டாட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஒன்றுகூடல் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் அல்லது வீட்டில் ஒன்று சேருங்கள்.

உணவுப் பகிர்வு என்பது அனைவரும் சேர்ந்து சமைத்தோ அல்லது உணவகங்களுக்குச் சென்றோ சிறப்பு உணவை அனுபவிக்கலாம்.

: குடும்பத்தின் பழைய புகைப்படங்கள் அல்லது ஆல்பங்களைப் பார்ப்பது உறவுகளை மேலும் பலப்படுத்தும்.

அந்த உணர்வோடு குடும்ப தின விழாவை சிறப்பாகக் கொணாடாடுவோம்.

தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் அன்பு அழைப்பை ஏற்று அனைவரும் ஒன்றுகூடுவோம்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை