Saturday, June 13, 2026

விகேகே ராஜசேகரன் அணி, ‘வெற்றி அணி’! -டாக்டர் ராஜசேகரன் மோகன், பிரவீன் செல்வம் நம்பிக்கை

கோலாலம்பூர் – சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்க நிர்வாக குழுவிற்கு நாளை நடைபெற உள்ள தேர்தலில் வி கே கே தியாகராஜன் தலைமையிலான அணி வெற்றி அணி என்று இந்த அணியில் நிர்வாகக் குழுவிற்கு போட்டியிடும் டாக்டர் ராஜசேகர் மோகனும் பிரவீன் செல்வமும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

நாட்டின் பாரம்பரிய வர்த்தக அமைப்பான கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தக தொழிற்சங்கம் இந்திய வர்த்தக சமூகத்திற்கு இதுவரை எண்ணற்ற சாதனைகளை புரிந்திருந்தாலும் மாறிவரும் அரசியல் பொருளாதார வர்த்தக சூழலுக்கு ஏற்ப புது மறுமலர்ச்சியை வி கே கே தியாகராஜன் தலைமையிலான அணி ஏற்படுத்தும் என்று இவ்விருவரும் நம்பிக்கை தெரிவித்தனர்.

கோலாலம்பூர்-சிலாங்கூர் இந்திய வர்த்தக தொழிற்சங்கத்தை சிறந்த முறையில் முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்வதற்கு ஏதுவாக விகேகே ராஜசேகரன் தலைமையில் அமைந்துள்ள அணியில் பல் துரை சார்ந்த வல்லுநர்களும் தொழில் முனைவோரும் இடம்பெற்றுள்ளனர்.

விகேகே ராஜசேகரன் அணியில் துணைத்தலைவர் பதவிக்கு பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார்.

நாளை ஞாயிற்றுக் கிழமை தோட்ட மாளிகையில் கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்தின்
ஆண்டுக் கூட்டமும் 2026-’28 தவணைக்கான புதிய நிர்வாகக் குழுத் தேர்தலும் நடைபெறுகிறது.

இதன் தொடர்பில் நேற்று கோலாலம்பூர் லேக் கார்டன் வளாகத்தில் விகேகே ராஜசேகரன் தலைமையிலான அணி சார்பில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.

இராஜசேகரன் அணியில் துணைத் தலைவர் பதவிக்கு நடப்பு உதவித் தலைவர் பன்னீர் செல்வம் போட்டியிடுகின்றார்.

அதேபோல் உதவித் தலைவர் பதவிக்கு இராஜசேகரன் அணி சார்பில் டாக்டர் சித்ரா தேவி போட்டியிடுகின்றார்.

பொருளாளர் பதவிக்கு இராஜசேகரன் அணி சார்பில் ஐ.ஆர். பிரபாகரன் போட்டியிடுகிறார்.

மொத்தம் 14 கவுன்சிலர் பதவிகளுக்கு இராஜசேகரன் அணி சார்பில் டாக்டர் ராஜசேகரன் மோகன் (2), டாக்டர் நெடுஞ்செழியன் வேங்கு(4), டாக்டர் செல்வராஜு எஸ் ஹரி கிருஷ்ணா (7), டோனி க்ளிப்போர்ட் தோமஸ் (12), ஷாமில் பச்சுலால் பட்டேல் (15), கிரிஷ் மாதவன் (16), டத்தோ கணேஷ் முராஜ் கே ராஜாமணி(21), டி பிரவீன் செல்வம் (22) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்தக் கூட்டத்தில் மைக்கி துணைத் தலைவர் டத்தோ டாக்டர் ஏ டி கே ராஜா உள்ளிட்ட பிரமுகர்கள் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் என ஏறக்குறைய 200 பேர் கலந்து கொண்டனர் .

கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத் தேர்தலில் தங்கள் அணியை வெற்றி பெற செய்யும்படி டாக்டர் ராஜசேகரன் மோகனும் டி பிரவீன் செல்வமும் கேட்டுக்கொண்டனர்.

குறிப்பாக டாக்டர் ராஜசேகரன் தனக்கு இரண்டாம் (2) எண்ணிலும் பிரவீன் செல்வம் 22 ஆம் எண்ணிலும் கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தக தொழிற்சங்க உறுப்பினர்கள் தங்கள் வாக்குகளை பெருவாரியாக அளித்து வெற்றி பெற செய்யும்படி கேட்டுக் கொண்டனர்.

தலைவர் பதவி தேர்தலில் வெற்றி பெற்றால் பல திட்டங்களை வகுத்து கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்தை சிறந்த முறையில் வழி நடத்துவேன்;
அதேபோல் சங்கம் மேன்மேலும் சிறக்க கடுமையாக உழைப்பேன் என்றார்.

துணைத் தலைவருக்கு களம்காணும் மோகனா சின்னத்தம்பி கோலாலம்பூர் சிலாங்கூர் மாநிலத்தில் பெண் தொழில் முனைவோரின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என்று தெரிவித்தார்.

கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்தின் செயலாளராக இருந்து சிறந்த முறையில் சேவையாற்றி இருக்கிறேன்.

அந்த வகையில் பெண்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டுக்கும் பாடுபடுவேன் என்று மோகனா சின்னத்தம்பி தெரிவித்தார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை