Monday, June 15, 2026

வெப்ப-வறண்ட வானிலைக்கு அணியமாக இருங்கள்! -மலேசியர்களுக்கு அறிவுறுத்தல்!!

‘எல் நினோ’ தட்ப-வெப்ப சுழற்சியின் விளைவாக தற்பொழுது மலேசிய மண்டலத்தைச் சூழ்ந்துள்ள வெப்ப அலைக்கு ம்லேசியர்கள் தங்கள் வாழ்வை தக அமைத்துக்கொள்ளும் அதேவேளை, உடல் வெப்ப நிலையை சீராக வைத்திருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தற்போதைய கடும் வெப்பச் சூழல், நாட்டைப் பாதிக்கத் தொடங்கும் என்றும் 2027-ஆம் ஆண்டின் தொடக்கம்வரை இந்நிலை நீடிக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பருவ காலம் என்பது தப்பி, திடீர் மழை திடீர் வெள்ளம் என்று மாறியுள்ள தற்போதைய வானிலை நிலவரம் குறித்து விழிப்புடனும் கவனத்துடனும் இருக்குமாறு மலேசியர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

எல் நினோ நிகழ்வின் காரணமாக, வெப்பமான மற்றும் வறண்ட வானிலை நிலவுவதால், இதை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு மலேசியர்கள் நினைவுறுத்தப் பட்டுள்ளனர். தற்போதைய வெப்பத்தாக்கம் அடுத்த ஆண்டின் தொடக்கம் வரை நீடிக்கக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தென்மேற்குப் பருவமழையின்போது, வழக்கத்தை விட அதிக வெப்பமும் வறண்ட சூழலும் நிலவும் என்று எதிர்பார்க்கப் படுவதாக துணைப் பிரதமர் அகமட் ஜாஹிட் ஹமிடி கூறியுள்ளார்.

மத்திய பேரிடர் மேலாண்மைக் குழுவின் தலைவருமான ஜாகிட், இந்த நிகழ்வு பல பகுதிகளில் மழையளவைக் குறைத்து, தண்ணீர் பற்றாக்குறை, காடு மற்றும் சதுப்பு நிலத் தீ, அத்துடன் புகைமூட்டம் ஆகியவை அதிகரிக்கும் ஆபத்தும் உள்ளதென்று அவர் மேலும் தெரிவித்தார்.

“அனைத்து மலேசியர்களும் தற்போதைய வானிலை நிலவரங்கள் குறித்து விழிப்புடனும் கவனத்துடனும் இருக்குமாறு அறிவுறுத்தி யுள்ள அவர், தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துங்கள், திறந்தவெளியில் எரிக்கும் செயல்களைத் தவிர்க்கும்படியும் வெப்பமான வானிலையால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய குடும்ப உறுப்பினர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும்படியும் அவர் நாட்டு மக்களுக்கு நினைவுறுத்தியுள்ளார்.

அரசாங்கம் நிலைமையை தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து, மக்களின் பாதுகாப்பு, நலன் குறித்து தொடர்ந்து விழிப்பு நிலையில் இருக்கும் தெரிவித்துள்ள அதேவேளை, பொதுமக்களும் myCuaca செயலி மற்றும் வானிலை ஆய்வுத் துறை(MetMalaysia) மூலம் வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ தகவலை கண்காணிக்கும்படியும் அவர் பொதுமக்களை வலியுறுத்தினார்.

மே 14 அன்று தொடங்கி செப்டம்பர் வரை தொடரும் என எதிர்பார்க்கப்படும் தென்மேற்குப் பருவமழையின்போது, வழக்கத்தை விட அதிக வெப்பமான வறண்ட வானிலையை மக்கள் எதிர்கொள்ள வேண்டொய்யிருக்கும் என்று MetMalaysia-வின் தலைமை இயக்குநர் ஹிஷாம் அனிப்’உம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை