Tuesday, June 16, 2026

ஜோகூர்-நெகிரி சட்டமன்றத் தேர்தல்: -இந்திய வாக்காளர்கள் அன்வார் கூட்டணியை அடியோடு புறக்கணிக்க வேண்டும்!!

ஜோகூர் சட்டமன்றத்திற்கான 16வது பொதுத் தேர்தல் அடுத்த மாதம் ஜூலை 11ஆம் நாள் நடைபெற உள்ள நிலையில் இந்திய வாக்காளர்கள் பிரதமர் அன்வார் தலைமையிலான பக்கத்தான் கூட்டணியை அடியோடு புறக்கணிக்க வேண்டும் என்று மலேசிய முன்னேற்ற கட்சி- எம்ஏபி ஜோகூர் மாநிலத் தலைவர் மோகன் எல்லப்பன் வலியுறுத்தி உள்ளார்.

மலேசிய இந்தியர்களுக்கான குறிப்பாக தமிழர்களுக்கான அடையாளம், உரிமை அனைத்தையும் ஒவ்வொன்றாக பறித்துக்கொண்ட அன்வார் கல்வி அமைச்சில் தமிழ்க் கல்வி பிரிவுக்கு தமிழாய்ந்த தமிழர் ஒருவரை நியமிக்கவில்லை; அதைப்போல பினாங்கு மாநில இந்து அறவாரியத்திற்கு ஓர் இந்துவை தலைவராக நியமிக்கவில்லை; ஆண்டுதோறும் நிதிநிலை அறிக்கையில் தமிழ் பள்ளிகளுக்கென ஒதுக்கப்பட்டு வந்த மானிய ஒதுக்கீட்டை அடியோடு இல்லாமல் செய்து விட்டார்;

13ஆவது மலேசிய பெருந்திட்டத்தில் இந்திய சமுதாய பொருளாதார வளர்ச்சிக்காக சிறப்புத் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்று எம்ஏபி தலைமை சார்பில் பலமுறை கேட்டும் அதை செவிமடுக்காமல் புறந்தள்ளி விட்டார் அன்வார்.

இப்பொழுது தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டவுடன் அடையாள அரசியல் நடத்த தொடங்கிவிட்டார். ‘மலேசிய மீடியா கவுன்சிலு’க்கு (எம்.எம்.எம்) கூட்டரசு நீதிமன்ற முன்னாள் நீதிபதி நளினி பத்மநாதனை நியமித்து, ஏதோ தமிழருக்கு முன்னுரிமை அளிப்பதைப் போல பம்மாத்து அரசியல் செய்கிறார்;

அதைப்போல நேற்று திங்கட்கிழமை புக்கிங் கியாரா பகுதி மக்களுக்கான வீட்டு கட்டு-மானத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்கு அன்வார் நேரில் வந்திருக்கிறார்.

இந்திய சமுதாயத்தில் தன்மீது எழுந்திருக்-கின்ற வெறுப்பையும் கொந்தளிப்பையும் சமாளிப்பதற்காக, தேர்தல் அறிவிக்கப்பட்ட-வுடன் இப்பொழுது அடையாள அரசியல் நடத்த அன்வார் முன் வந்திருக்கிறார்.

வாக்களிப்பு முடிந்ததும் எட்டாத தூரத்திற்கு சென்று விடுவார்.

தேர்தல் வாக்குப்பதிவு நாள், ஜூலை பதினோராம் நாள்வரை அன்வார் இப்படித்தான் இந்திய சமுதாயத்துடன் ஒட்டி உறவாடி நாடகமாடுவார்.

இதை ஜொகூர் மாநிலத்தில் வாழ்கின்ற இந்திய வாக்காளர்கள் நன்கு அடையாளம் கண்டு அன்வார் செய்த துரோகத்தை மனதில் நிறுத்தி ஒரே ஒரு வாக்காளர்கூட நம்பிக்கை கூட்டணிக்கும் குறிப்பாக பி கே ஆர், ஜசெக, அமானா கட்சிகளின் வேட்பாளர்களுக்கு தங்கள் வாக்குகளை அளிக்க வேண்டாம் என்றும் அதைப்போல ஆகஸ்ட் முதல் நாளில் வாக்களிப்பு நடைபெற இருக்கின்ற நெகிரி செம்பிலான் மாநில இந்திய வாக்காளர்களும் பக்கத்தான் கூட்டணியை அடியோடு புறக்கணிக்க வேண்டும் என்றும் எம்.ஏ.பி.. சார்பில் மீண்டும் வலியுறுத்துவதாக மோகன் எல்லப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை