Tuesday, June 16, 2026

மஇகா 80-ஆம் ஆண்டு நிறைவு விழா தொடர்பில் தேசிய அளவில் விளையாட்டுப்போட்டி! -டத்தோ முருகையா

மலேசியவாழ் இந்தியப் பெருமக்களின் பாரம்பரிய அரசியல் இயக்கமான மலேசிய இந்தியர் காங்கிரஸ்-மஇகா, எண்பதாம் ஆண்டில் பயணிப்பதை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுடன் அண்மையில் கொண்டாடியது.

அரசியல், பாரம்பரியம், பண்பாடு, சமூகம், இளைஞர் & மகளிர் சமுதாய ஈடுபாடு- எழுச்சி போன்ற தளங்களை உள்ளடக்கி நாடு முழுவதும் தொகுதி வாரியாக நிகழ்ச்சிகள் நடைபெற்று முடிந்ததை சமுதாயம் அறியும்; அனைத்தும் ஊடக வாயிலாக வெளிப்பட்டன.

இதன் நிறைவுக் கட்டமாக, நாடு முழுவதும் 152 தொகுதிகளில் விளையாட்டு போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளதாக 80 ஆம் ஆண்டு விழாக் குழு தலைவரும் மஇகா தேசிய உதவித் தலைவர்களில் ஒருவருமான டத்தோ த. முருகையா தெரிவித்தார்.

காற்பந்து, பூப்பந்து, மலையேற்றம், ஹொக்கி, கராத்தே உள்ளிட்ட விளையாட்டுப் போட்டி-களுடன் இந்த நிறைவு விழா பிரமாண்ட அளவில் நடைபெற உள்ளது.

மஇகா-வின் இந்த எண்பதாம் ஆண்டு நிறைவு விழாவில் தேசிய ஒருமைப்பாடு பிரதிபலிக்-கும் வகையில் மூவினமும் கலந்து கொள்ளும் படி இந்த விளையாட்டுப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் துணை அமைச்சருமான முருகையா தெரிவித்தார்.

152 தொகுதிகளின் பொறுப்பாளர்கள், வெவ்வேறு விளையாட்டுகளை தேர்வு செய்து போட்டிக்கு ஏற்பாடு செய்து வருகின்றனர்.

கடந்த நூற்றாண்டில் மலேசிய இந்திய சமுதாயம் விளையாட்டுத்துறையில் மிகுந்த ஆர்வம் காட்டி அதிக சாதனை புரிந்தது; தற்போது அந்த நிலையில் தொய்வு ஏற்பட்டுள்ளதால், நம் சமுதாயத்தில் குறிப்பாக இளைஞர்களுக்கு விளையாட்டுத் துறையின்மீது தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த நிறைவு விழா மிகவும் எழுச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் சொன்னார்.

இந்த விளையாட்டு போட்டி நாடு முழுவதும் ஜூன் இருபதாம் நாள் நடைபெற உள்ள வேளையில் 21ஆம்

தவிர, ஜூன் 20, 21-ஆம் நாட்களில் 150 இளைஞர்கள் பங்குபெறும் வகையில் பேச்சு பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நம் இளைஞர்கள் குறிப்பாக மஇகா இளைஞர் படையினர் பேச்சுக்கலையில் சிறந்து விளங்கும் அதேவேளை, பக்குவமாகவும் பொருத்தமாகவும் அரசியல் ரீதியாகவும் பேசுவதற்கு ஏற்ற வகையில் பயிற்சி அளிப்பதற்காக இந்த முனைப்பு காட்டப்படுகிறது.

தேசிய அளவிலான இந்த விளையாட்டுப் போட்டியில் ஜூலை 11ஆம் நாள் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள ஜொகூர் மாநிலத்திற்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் முடிந்தபின் பிரிதொரு நாளில் அந்த மாநிலத்தில் 80 ஆம் ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டி நடைபெறும்;

எல்லாவற்றுக்கும் மேலாக ஓரு முத்தாய்ப்பான நிகழ்ச்சியும் 80 ஆம் ஆண்டு நிறைவு விழா தொடர்பில் இவ்வாண்டு நிறைவுக்குள் நடைபெறும் என்று இதன் தொடர்பில் இன்று மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டத்தோ முருகையா மேலும் அறிவித்தார்.

ஏறக்குறைய 5,000 பேரை உள்ளடக்கிய :Gala Dinner’s அளவிற்கு தேசிய ஒருமைப்பாடும் இறையாண்மையும் பிரதிபலிக்கும் வண்ணம் எண்பதாம் ஆண்டு நிறைவு விழா, 2026 டிசம்பர் மாதத்திற்குள் நடைபெற இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை