Monday, April 20, 2026

வங்காள விரிகுடா மீண்டும் குமரிக் கடல் ஆனது: சன் தொலைக்காட்சிக்கு பாராட்டு

தொல் தமிழினத்தின் தொன்மையான அடையாளங்கள் யாவும் ஒவ்வொன்றாக, ஒவ்வொரு வகையில் மறைக்கப்பட்டு வந்துள்ளன.

தமிழ் இனத்தின் வரலாற்றுப் பெருமைக்கும் பண்பாட்டு மேன்மைக்கும் கட்டியம்கூறவல்ல இடங்களின் பெயர்களை மாற்றுவதும் அத்தகைய சூழ்ச்சியில் ஒரு வகை.

மேலைக் கடல் அரபிக் கடல் ஆனது, குமரி மலை உச்சி, விவேகானந்தர் பாறையானதும் அப்படித்தான்; நல்ல வேலையாக அங்கு இப்பொழுது திருவள்ளுவரின் சிலையும் கண்ணாடி பாலமும் அந்த அடையாளத்தை ஓரளவுக்கு மாற்றி தமிழியப் பாங்கை நிறுவ வழி ஏற்பட்டுள்ளது;

சோழ மண்டலத்திலிருந்து ராஜேந்திர பெருமன்னன் படை நடத்தி வந்து மலாயாவின் கடாரத்தை வென்றது, நாம் அனைவரும் அறிந்ததுதான். சோழ பெருவள நிலத்திலிருந்து படை நடத்தி வரப்பட்ட குமரிக்கடல் வங்காள விரிகுடா என்று சதிகாரர்களால் பெயர் மாற்றப்பட்டது.

அதை திருத்தும் விதமாக மீண்டும் குமரிக்கடல் என்று சன் தொலைக்காட்சி செய்திகளில் குறிப்பிடப்படுவது பாராட்டிற்குரியது; தமிழிய மீட்சிக்கு ஓரளவேனும் துணை நல்க கூடியது. வாழ்க சன் தொலைக்காட்சி.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை