
மலேசிய இந்து சங்க 2026-ஆம் ஆண்டுக் கூட்டம் வரும் 19 ஆம் நாள் பெட்டாலிங் ஜெயா பண்டார் சன்வே அருள்மிகு திருமுருகன் கோவில் மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெற இருக்கிறது.
27 பேர் கொண்ட மத்திய நிர்வாகக் குழுவில் வழக்கம் போல ஒன்பது பேர் விலகி புதிதாக ஒன்பது பேர் ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்படும் நடைமுறையின் படி இம்முறையும் 9 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

அரசாங்கத்தில் உயர் பதவி வகிக்கும் முனைவர் முரளிதரன் தலைமையில் மறுமலர்ச்சி அணி சார்பில் ஜெகசீலன் குஞ்சம்பு,
மா. முனியாண்டி,
க. மாணிக்கவாசகம்,
எஸ் பாலாமணி,
பால கிருஷ்ணன்,
ஜி சந்துரு,
தினேஷ் வர்மன் குழுக்கள்,
பிரேமலா,
ப.சிவம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
நாடு தழுவிய அளவில் மலேசிய இந்து சங்கத்தின் உறுப்பினர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு வாக்களிப்பார்கள்.
பதவி மோகத்திற்காக மறுமலர்ச்சி அணியினர் போட்டியிடவில்லை.
மலேசிய இந்து சங்கத்தில் மாற்றத்தையும் மறுமலர்ச்சியையும் ஏற்படுத்த வேண்டும் என்ற இலக்கில் மறுமலர்ச்சி அணி போட்டியிடுகிறது என்று பினாங்கு மாநிலத்தை சேர்ந்த முனியாண்டி இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.


