
ஜோகூர் மாநிலத்தில் புதிதாக அமைந்துள்ள 16- வது சட்டமன்றத்தில் மஇகா சார்பில் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.
நேற்று ஜூலை 11 சனிக்கிழமை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மஇகா சார்பில் போட்டியிட்ட நான்கு வேட்பாளர்களும் தேசிய முன்னணி சார்பில் வெற்றி பெற்றனர்.
“இந்த அளவுக்கு ஆதரவை வாரி வழங்கிய இந்திய சமுதாயத்திற்கு மனமார்ந்த நன்றியை மஇகா சார்பில் தெரிவித்துக் கொள்கின்றேன்”.
‘கெமெலா’ சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட ரவீன் குமார், ‘புக்கிட் பாத்து’ தொகுதியில் போட்டியிட்ட ஆர். குமரன், ‘பெர்லிங்’ தொகுதியில் போட்டியிட்ட பன்னீர்செல்வம், ‘ககாங்’தொகுதியில் போட்டியிட்ட ருகேந்திரன் ஆகிய நால்வரும் வெற்றி பெற்றனர்.

இவர்களில் இருவர் மலாய் வாக்காளர்கள் அதிகம் உள்ள தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்; மற்ற இருவரும் சீன, இந்திய வாக்காளர்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளில் போட்டியிட்டவர்கள்.
எது எவ்வாறாக இருந்த போதிலும் பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்திய சமுதாயத்திற்கு மஇகா தொடர்ந்து ஆற்றி வருகின்ற சேவைக்குக் கிடைத்த அங்கீகாரமாக இதைக் கருதும் அதேவேளை, தேசிய முன்னணியை வழிநடத்துகின்ற அம்னோ உள்ளிட்ட உறுப்புக்கட்சிகள் மஇகாவின் வெற்றிக்கு பெரிதும் பங்காற்றியுள்ளன
எல்லாவற்றுக்கும் மேலாக போட்டியிட்ட நான்கு தொகுதிகளிலும் வெற்றிபெற வைத்த வாக்காளர்களுக்கு மலேசிய இந்தியர் காங்கிரஸ் சார்பில் மீண்டும் நன்றி தெரிவிப்பதாக தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
ரவூப் அருள்மிகு சுப்பிரமணியர் ஆலயத்தில் ஆலயத் தலைவர் டத்தோ தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்ற திருக்குட நன்னீராட்டு விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளருக்கு சந்தித்த பொழுது மலேசிய நாடாளுமன்ற மேலவை வருமான தான்ஸ்ரீ டத்தோஸ்ரீ டாக்டர் விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு பேசினார்.


