Monday, July 13, 2026

ரவூப் சுப்பிரமணியர் ஆலயத்தில் திருக்குட நன்னீராட்டு புனித விழா!

பகாங் மாநிலம் ரவூப் அருள்மிகு சுப்பிரமணியர் ஆலயத்தில் இன்று காலையில் திருக்குட நன்னீராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

ஆலயத் தலைவர் டத்தோ தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் மஇகா தேசியத் தலைவர் தான்ஸ்ரீ டத்தோஸ்ரீ டாக்டர் ச விக்னேஸ்வரன் சிறப்புப் பிரமுகராகக் கலந்து கொண்டார்.

ரவூப் வட்டாரத்தில் அமைந்துள்ள பாரம்பரிய வழிபாட்டுத்தலமான இந்த அருள்மிகு சுப்பிரமணியர் ஆலயத்தில் அண்மை ஆண்டுகளாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

திருப்பணிகள் நிறைவுபெற்ற நிலையில் இன்று இந்த கும்பாபிசேக விழாவிற்கு ஏற்பாடு செய்ததாக ஆலயத் தலைவர் டத்தோ தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

இதன் தொடர்பில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த டத்தோ தமிழ்ச்செல்வன், இந்தப் பகுதியில் வாழ்கின்ற பக்த அன்பர்களுக்கு நீண்ட காலமாக அருள்பாலித்து வருகின்ற அருள்மிகு சுப்ரமணிய கடவுளுக்கு இந்த திருக்குட நன்னீராட்டு விழாவை நடத்தி வைக்கக் கிடைத்த பேறு பெரும்பேறாகும்.

இதன் தொடர்பில் ஆலயத் திருப்பணி நடைபெற்ற பொழுது ஏராளமான கொடையாளர்களும் பொதுமக்களும் நன்கொடை அளித்தனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக முருகப்பெருமானின் திருவருள் கூடியதன் அடிப்படையில் இந்த இறை நேச விழா நடைபெறுவதாக அவர் தெரிவித்தார்.

தொடர்பில் நேற்று சனிக்கிழமை இரவு 10:00 மணியளவில் சிறப்பான முறையில் வாண வேடிக்கை நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான பக்தர்களும் சிறார்களும் இந்த வாண வேடிக்கையைக் கண்டு மகிழ்ந்தனர்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை