Monday, August 24, 2026

ஆறாவது குடமுழுக்கு விழாவில்ஆற்று வெள்ளம் போல் பக்தர்கள்:-நடராஜா பெருமிதம்!

கோலாலம்பூர் அருள்மிகு கோர்ட்டுமலை பிள்ளையார் பாளையத்தில் இன்று ஆறாவது திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது.

கோலாலம்பூர் அருள்மிகு மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர் நடராஜா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கோலாலம்பூர் மாநகரின் பாரம்பரிய பொது போக்குவரத்து அடையாளங்களுல் ஒன்றான புடு பேருந்து நிலைய வாகன நிறுத்தும் இடமெல்லாம் பக்தர்கள் நிரம்பி வழிந்தனர்.

இந்து சமயத்தின் அறுங் கொள்கைகளில்ஒன்றான கணபதிய வழிபாட்டு நாயகனான பிள்ளையார் குடி கொண்டிருக்கும் இந்த ஆலயத்தில் இதற்கு முன்னர் 1963, 1975, 1987, 1999, 2012-ஆம் ஆண்டுகளில் என ஏற்கெனவே ஐந்து முறை குடமுழுக்கு விழா நடைபெற்றுள்ளன.

இந்த ஆறாவது திருக்குட நன்னீராட்டு புனித விழாவை முன்னிட்டு இந்த ஆலயம் கருங்கல் ஆலயமாக சீரமைப்பு செய்யப்பட்டு இன்று இந்த திருக்குறள் நன்னீராட்டு விழா பக்தி மணத்தோடு நடைபெற்று முடிந்துள்ளது.

திருக்குட முழுக்கு விழாவுக்கு முன்னதாக தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா அடியே பேசினார்.

ஆலய திருப்பணிக்கு நன்கொடை வழங்கியவர்கள் என்று பற்றி பாராட்டு புகழ்ந்து பேசினார்; கருங்கல் கோயில் உருவான விதம் பற்றியும் பக்தர்களிடம் எடுத்துரைத்தார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை