
கோலாலம்பூர் கோர்ட்டுமலை பிள்ளையார் கோவிலில் இன்று ஆறாவது குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது.
இதன் தொடர்பில் கவிதை வாசித்து டான்ஸ்ரீ நடராஜாவைப் புகழ்ந்த டத்தோஸ்ரீ மு சரவணன், ஏறக்குறைய அரை கோடி வெள்ளி செலவில் கருங்கல் கோயிலாக உருமாற்றம் செய்தவர் தான்ஸ்ரீ நடராஜா என்று புகழ்ந்தார்.
கோலாலம்பூர் அருள்மிகு மாரியம்மன் தேவஸ்தானத்தின் நிர்வாகத்தில் செயல்படுகின்ற கோர்ட்டு மலை பிள்ளையார் ஆலயம் தலைநகரில் உள்ள முக்கியமான வழிபாட்டு தலமாகும்.
அண்மைக் காலமாக திருப்பணிகள் நடைபெற்று வந்த நிலையில் கருங்கல் கோவிலாக உருமாற்றும் திருப்பணிகள் யாவும் முழுமை பெற்றபின் இன்று இறைவன் அருளால் திருக்குட நன்னீராட்டு விழா சீரோடும் சிறப்போடும் நடைபெற்று முடிந்துள்ளது

இத்தகைய பணியை டான்ஸ்ரீ நடராஜா அல்லாமல் வேறு ஒருவரால் சாதிக்க முடியாது என்று புகழ்ந்தார்.



