
அருள்மாமணி ஆறுமுகம் பிள்ளையின் கொள்ளுப் பெயர்த்தியும்… தங்கவேலு தங்கமணி தம்பதியரின் பெயர்த்தியும்…
பாலசுப்பிரமணி- புவனா இணையரின் மகளுமான தங்கமணிக்கும்
திருப்பத்தூர் சட்டமன்ற மேனாள் உறுப்பினர் அமரர் இராம சிவராமன்- தனலட்சுமி ஆகியோரின் மகன் சிவ வெங்கட்ட ராமனுக்கும் கடந்த சனிக்கிழமை மாலை ஏழு மணிஅளவில் திருமண நிச்சயதார்த்த விழா நடைபெற்றது.
திருப்பத்தூர் காரைக்குடி சாலையில் பிள்ளையார்பட்டி அருகில் வைரவன் பட்டியில் அமைந்துள்ள சிவராமன் கல்லூரி வளாகத்தில் இந்த விழா மிக விமரிசையாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் முன்னாள்.. இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள், அனைத்துக் கட்சி நிர்வாகிகள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திருப்பத்தூர் பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்!


