
நிகழும் 2026-ஆம் ஆண்டிற்கான தீபாவளி விடுமுறை நவம்பர் 08-ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை வருகிறது. தொடர்ந்து, நவம்பர் 09, 10(திங்கள்-செவ்வாய்) ஆகிய இரு நாட்களுக்கும் இயல்பாக விடுமுறை கிடைத்து விடுகிறது. ஆனால், நவம்பர் 11,12,13-புதன்-வியாழன்-வெள்ளி ஆகிய மூன்று தினங்களுக்கும் வழங்கப்படும் கூடுதல் விடுமுறை நாட்களை ஈடுகட்டும் வகையில் நவம்பர் 26, அக்டோபர் 10 & 24 ஆகிய மூன்று சனிக் கிழமைகளிலும் கூடுதல் வகுப்புகளை அந்தந்த தமிழ்ப் பள்ளியும் நடத்த வேண்டி இருப்பதால், அந்த 3 நாட்களிலும்பள்ளி நடைபெறும் என்றும் சம்பந்தப்பட்ட சனிக்கிழமைகளில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கட்டாயம் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது.
இதன் தொடர்பில் தமிழ்ப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வெளியிட்டுள்ள சுற்றறிக்-கையில், “மேற்கண்ட் 3 நாட்களில் மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயம் என்றும் மாணவர்களின் வருகை குறைவாக இருப்பின் அல்லது போதுமான காரண-மின்றி மாணவர்கள் பள்ளிக்குவராவிட்டால் ஏற்கெனவே கோரப்பட்ட விடுமுறை அனுமதி உடனடியாக ரத்து செய்யப்படும் என்றும் மாணவர்களின் சிறந்த வ்ருகையையும் பள்ளி நடவடிக்கை சுமுகமாக நடைபெறு-வதையும் உறுதிசெய்ய அனைத்துப் பெற்றோரின் ஒத்துழைப்பை வேண்டுகி-றோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோன்புத் திருநாள் காலத்திலும் சீனப் பெருநாள் காலத்திலும் வாரக் கணக்கில் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை கிடைக்கும் சூழலில் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு கூடுதலாக மூன்று நாள் விடுமுறை அளிப்பதில் கல்வி அமைச்சுக்கு என்ன சிக்கல் நேர்ந்துவிடப் போகிறது என்று தெரியவில்லை.
பண்டிகைக் காலத்திற்கு முந்தைய வார விடுமுறை நாட்களில், பல்வேறு முன்னேற் பாட்டையும் செய்துகொண்டு, பண்டிகை-யைக் கொண்டாட தத்தம் சொந்த ஊருக்குச் செல்லத் தயாராவது வழக்கம். இந்தச் சூழலில் சனிக்கிழமைகளில் பள்ளியை நடத்தினால், இது சம்பந்தப்பட்ட பெற்றோருக்கு இடையூறாக இருக்காதா?
பள்ளி வேன், பேருந்து ஓட்டுநர்கள்கூட சனிக்கிழமை மாணவர்களை பள்ளிக்கு அழைத்துச் செல்வதென்றால கூடுதல் கட்டணம் கேட்பார்கள். ஒருசில பெற்றோருக்கு வேலைக்கு செல்ல வேண்டிய நெருக்கடியும் இருக்கும்.
இவற்றை யெல்லாம் கருத்தில் கொண்டு கல்வி அமைச்சகம் தீபாவளி வாரத்தில் புதன்-வியாழன்-வெள்ளி மூன்று நாட்களுக்கும் சேர்த்து விடுமுறை வழங்குவதுதான் பொருத்தமாக இருக்கும்.
பொதுவாக, தமிழ்ப் பள்ளிகள் என்றாலே கிள்ளிக் கொடுக்கும் மனநிலையில்தான் கல்வி அமைச்சகம் செயல்படுகிறது.
இந்தச் சிக்கல் தொடர்பில், அரசியல் தலைவர்களும் சமூக-அரசுசாரா அமைப்புகளின் பொறுப்பாளர்களும் மடாணி அரசின் கல்வி அமைச்சிடம் கோரிக்கை வைத்தால் நன்றாக இருக்கும்; சமுதாயமும் பயனடையும்.
குறிப்பாக, மடாணி அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள இந்தியத் தலைவர்கள் வழக்கம்போல இந்த விசயத்திலும் மௌனம் காக்காமல் அக்கறை காட்டி குரல் கொடுத்தால் நல்லது.
இந்த விவகாரம் தொடர்பில் கருத்து கேட்க, தேசிய தமிழ்ப் பள்ளி தலைமை ஆசிரியர் மன்றத் தலைவர் பழனியுடன் பலமுறை தொடர்புகொண்டும் அவரின் கருத்தைப் பெற முடியவில்லை


