Wednesday, September 30, 2026

கொள்ளைச் சம்பவத்துடன் எங்கள் கடைக்கு எந்தத் தொடர்பும் இல்லை: -ஈஜோக் எம்.ஜி. கேஷ் & கேரி உரிமையாளர்கள்!

சமூக வலைத்தள அவதூறுகள் குறித்து மலேசிய தகவல் பல்லுடக ஆணையத்தில் (எம்சிஎம்சி) புகார்!

ஈஜோக் பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கொள்ளைச் சம்பவத்துக்கும், தங்களின் சில்லறை விற்பனைக் கடைக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என எம்ஜி கேஷ் & கேரி கடையின் உரிமையாளர் கோகிலா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ஈஜோக்கில் இன்னொரு கடையில் நடை பெற்ற கொள்ளைச் சம்பவத்தை தங்கள் கடையுடனும் தங்களுடனும் தொடர்புபடுத்தி சமூக வலைத்தளங்களில் சில தகவல்கள் மற்றும் காணொளிகள் பரவி வருவதாக தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே காவல்துறையில் புகார் செய்யப்பட்டுள்ள தாகவும் சமூக வலைத்தளங்களில் தங்களைப் பற்றி அவதூறான தகவல்கள் பரப்பப்படுவது குறித்து மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான எம்சிஎம்சியிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், சமூக வலைத்தளங்களில் பரவி வரும் காணொளியில், வேறொரு கடையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் தங்களது கடையில் பணியாற்றிவரும் ஒருவர் தொடர்புபட்டிருப்பதாக குறிப்பிடப் பட்டுள்ளதாகவும் கோகிலா தெரிவித்தார்.

அந்த நபரிடம் காவல்துறையினர் ஏற்கெனவே விசாரணை நடத்தி, குற்றத்தன்மை எதுவும் இல்லாத நிலையில் அவரை போலீசார் விடுவித்து விட்டனர். எனவே இந்த விவகாரம் தொடர்பாக உண்மையான தகவல்கள் தெரியாமல் தங்களது கடையையும் தங்களையும் சம்பந்தப்படுத்தி கருத்துகள் தெரிவிப்பதையோ அல்லது அவதூறுகளைப் பரப்புவதையோ தவிர்க்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

“விவரங்கள் முழுமையாக தெரியாமல் சமூக வலைத்தளங்களில் தகவல்களைப் பகிர்வதும், எங்களைப் பற்றி அவதூறாக பேசுவதும் எங்களது நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற அவதூறுகளைத் தொடர்ந்து பரப்புபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,” என கோகிலா எச்சரித்தார்.

தாங்கள் குறித்த வட்டாரத்தில் கடந்த 12 ஆண்டுகளாக தொடர்ந்து வியாபாரம் செய்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், இந்த நீண்டகால வியாபாரப் பயணத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையுடன் செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தங்களது வியாபாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கத்திலேயே தற்போது தங்களைப் பற்றிய தவறான தகவலும அவதூறும் பரப்பப்படுவதாக தாங்கள் நம்புவதாகவும் அவர் கூறினார்.

எனவே, சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்களை உண்மை என நம்பி பகிர்வதற்கு முன்னர் அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்யுமாறும், சம்பந்தப்பட்ட விவகாரம் தொடர்பான விசாரணையை அதிகாரிகள் மேற்கொண்டு இருப்பதால் பொதுமக்கள் பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறும் கோகிலா கேட்டுக்கொண்டார்.

மேலும், தங்களது கடையின் பெயருக்கும் கொள்ளைச் சம்பவத்துக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி அவதூறு பரப்பப்படும் பட்சத்தில், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளத் தயங்கமாட்டோம் என்றும் அவர் எச்சரித்தார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை