Thursday, October 1, 2026

இயக்குனர் இமயம் பாரதிராஜாவிற்கு புகழ் அஞ்சலி!

சேலத்தில் முளைவிட்டு கோடம்பாக்கத்தில் கிளைவிட்டு செழித்த தமிழ்த் திரைப்பட உலகத்தை கிராமப்புறத்திற்கும் பச்சை ஆடை உடுத்திய இயற்கை வெளிக்கும் நகர்த்தியவர் ‘நினைவில் வாழும்’ இயக்குனர் இமயம் பாரதிராஜா!

அவருக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்வு கோலாலம்பூரில் நடைபெற இருக்கிறது

மண்வாசனை தந்த இயக்குநர் இமயம் பாரதிராஜாவிற்கு முதல் மரியாதை புகழஞ்சலி செலுத்தும் விழா கோலாலம்பூரில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளதாகத் தெரிவித்த மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ மு. சரவணன், பாரதிராஜாவையும் உலகளாவிய தமிழ் திரை ரசிகர்களையும் பிரிக்க முடியாது என்று இதன் தொடர்பில் இன்று நேதாஜி அரங்கத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

கண்ணதாசன் அறவாரியம், மலேசிய இந்தியர் விளையாட்டு கலாச்சார அறவாரியம்- ‘யாசி’, மலேசிய முக்குலத்தோர் மன்றம் ஆகியவை இணைந்து இவ்விழாவை ஏற்பாடு செய்துள்ளன.

அக்டோபர் 11ஆம் நாள், பிற்பகல் 3:00 மணி அளவில் பத்துமலை ஷெங்கா மண்டபத்தில் விழா நடைபெறவுள்ளது.

ஏறக்குறைய 1,000 பேர் கலந்து கொள்ளும் வகையில் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், நட்சத்திர நாயகத் தம்பதியர் சரத்குமார்- ராதிகா இணையர் உட்பட பல பிரமுகர்கள் இவ்விழாவில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இயக்குநர் இமயம் பாரதிராஜா, திரைப்பட எல்லையைக் கடந்து தமிழுக்கும் தொண்டாற்றிய தமிழினப் பற்றாளர்

இதன் அடிப்படையில் பாரதிராஜா போன்றவர்களுக்கு விழா எடுப்பது மலேசியத் தமிழர்களின் வழக்காகும்.

தவிர பாரதிராஜா போன்ற ஆளுமையரை, வளரும் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் விழாவாகவும் இந்த நிகழ்ச்சி அமையும்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்த் திரை இரசிகர்களும் பொதுமக்களும் தமிழ் ஆர்வலர்களும் திரளாக கலந்து கொள்ளும்படி டத்தோஸ்ரீ சரவணன் கேட்டுக் கொண்டார்.

இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் மலேசிய இந்தியர் விளையாட்டு கலாச்சார அறவாரியத் தலைவர் டத்தோ த. மோகன், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க ‘கம்பங்களில் ஒன்றான’ ஞான சைமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை