
தேசிய அளவில் இயங்குவதாக சொல்லிக் கொண்ட ஒரு முதலீட்டு நிறுவனத்தை நம்பி ஏறக்குறைய மூவாயிரம் பேர் முதலீடு செய்து தற்பொழுது ஏமாற்றத்திற்கு உள்ளாகி தேசிய காவல் படை தலைமை-யகம் புக்கிட் அமானில் இன்று புகார் மனு அளித்தனர்.
பெரிய அளவில் இலாப ஈவும் முதலீட்டுக்கு ஏற்ப பன்மடங்கு லாபமும் கிடைக்கும் என்றெல்லாம் அளிக்கப்பட்ட வாக்குறுதியை நம்பி இந்த வர்த்தக நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.
ஆயிரக்கணக்கில் ஆயிரக்கணக்கானோர் முதலீடு செய்தது ஒருபுறம் இருக்க அதிகமானோர் லட்சக்கணக்கில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.
ஒருவர், 3 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளிவரை முதலீடு செய்துள்ளதாகத் தெரிகிறது.
தொடக்கத்தில் அனைவருக்கும் இலாப ஈவு வந்துள்ளது. இதனால் மகிழ்ச்சியடைந்து நம்பிக்கை கொண்ட பலர் அடுத்தடுத்து முதலீடு செய்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதத்தில் வழக்கமாக வந்து கொண்டிருந்த இலாப ஈவு நின்றுள்ளது. இதனால் பதற்றம் அடைந்து கவலையுடன் அணுகியவர்களுக்கு, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் சார்பில் ஆறுதல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது சாதாரண தொழில்நுட்ப கோளாறு என்றும் விரைவில் இந்தசா சிக்கல் தீர்க்கப்பட்டு அனைவருக்கும் வழக்கம் போல லாப ஈவும் கூடுதல் வருமானமும் அவரவர் வங்கி கணக்கில் வழக்கம்போல சேர்ந்து விடும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஆனால் காலப்போக்கில் சொன்னபடி எதுவும் நடக்காததால் முதலீடு செய்தவர் கலக்கம் அடைந்து சம்பந்தப்பட்டவர்களை அழுத்த மாக விசாரித்த நிலையில், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் முக்கிய அதிகாரி வெளிநாடு சென்றுள்ளதாகவும் அவர் வந்தவுடன் எல்லாம் சீர் செய்யப்படும் என்றும் இதற்கிடையில் ஏதும் போலீஸ் புகார் செய்ய வேண்டாம் என்று சம்பந்தப் பட்ட முதலீட்டு நிறுவனத்தின் சார்பில் கேட்டுக் கொண்டுள்ளனர்.
நாட்கள் செல்ல செல்ல எதுவுமே நடக்காத-தால் சம்பந்தப்பட்ட முதலீட்டாளர்கள் அனை-வரும் இன்று தேசிய போலீஸ் படை தலைமையகமான புக்கிட் அமானில் திரண்டு புகார் மனு அளித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பில் போலீஸ் உரிய விசாரணை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட தங்கள் அனைவரின் முதலீட்டு நிதியை மீட்டுத் தர வேண்டும் என்று செய்தியாளர்-கள் மூலம் கேட்டுக் கொண்டனர்.


