
நாட்டின் புகழ்பெற்ற பாடகியரில் ஒருவரான தாரணி தேவி மலேசியத் தமிழ்க் கலை உலகில் மட்டுமல்ல; நம்மிடமிருந்தும் நிரந்தரமாக விடை பெற்றுள்ளார்.
இளம் வயதில் இப்படியான சூழல் நேர்ந்தது மிகவும் வருத்தத்திற்கு உரியது.
அண்மை காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அவர் உயிர் துறந்து இருக்கிறார்.
நாட்டின் மூத்த கலைஞர், கலைக்காகவே தம்மை அர்ப்பணித்த தண்டபாணியின் அன்பு மகள்களில் ஒருவரான இவர் அண்மையில் தலைநகரத்து டான்ஸ்ரீ சோமா அரங்கில், தண்டபாணி குடும்பத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியில் ‘ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி’ என்ற பாடலுக்கு தன் உடன்பிறந்த சகோதரியர் இருவருடன் சேர்ந்து மூவருமாக பாடிய பாடல் இன்னும் கண்ணிலும் கருத்திலும் நிழலாடுகிறது.
தாரணி தேவியின் புகழ், மலேசியத் தமிழ் இசை உலகில் என்னாளும் நிலைத்திருக்கட்டும்!!


