
புதுடில்லியில் அண்மைக்காலமாக நிகழும் அரசியல் நடவடிக்கை உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தியாவை இந்து ராஷ்டிரமாக உருவாக்க வேண்டும் என்னும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தின் அடிப்படையில் செயல்படுகின்ற மோடி தலைமையிலான பிராமண நல அரசு, அதற்கு இடையூறாக இருக்கின்ற தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் பரவியுள்ள திராவிட சித்தாந்தத்தை அடியோடு அழிக்க பார்க்கிறது.

இதன் விளைவாக எதிர்க்கட்சிகள் ஆளுகின்ற மாநில அரசுகளை எல்லாம் வீழ்த்துகின்ற அளவில் வாக்காளர் திருத்தம் என்ற பெயரில் கோடிக்கணக்கான வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியதன் விளைவாக இடது கம்யூனிஸ்ட் அரசாங்கம் கேரளாவிலும் மம்தா பானர்ஜியின் அரசாங்கம் மேற்குவங்கத்திலும் மு க ஸ்டாலின் தலைமையிலான அரசாங்கம் தமிழ்நாட்டிலும் தோற்கடிக்கப்பட்டுள்ளன.

இதற்கெல்லாம் அடிப்படை காரணம் வாக்குத்திருட்டு என்பதால் அத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ளுகின்ற மோடி- அமித்ஷாவின் கைப்பாவையான ஞானேந்திர குமார் தேர்தல் ஆணையத் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்பதை முன்னிறுத்திதான் அண்மைகா காலமாக புதுடில்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைமையில் மாணவர் போராட்டம் நடைபெற்று வருகிறது

.இதை ஒடுக்குவதற்காக மோடி அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இத்தகைய பாரதூர நடவடிக்கை இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான், மேற்குலகில் பிரிட்டிஷ் உள்ளிட்ட நாடுகளின் ஊடகம் அச்சமும் கவலையும் வெளிப்படுத்தியுள்ளன.

மோடியின் பாஜக அரசு மேற்கொள்ளும் ஜனநாயக விரோத போக்கு தொடர்பாகஅண்மைக்காலமாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இப்பொழுது ஐநா மன்றத்தின் மனித உரிமை ஆணையமே தலையிடுகின்ற அளவிற்கு நிலைமை முற்றியுள்ளது..
மாணவர் போராட்டத்தைக் கண்டு மிரண்டுபோன பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டனர்

மாணவர் போராட்டத்தை எதிர்கொள்ள துணிவில்லாத மோடி அரசு, புதுடெல்லிக்கு வருகின்ற நூற்றுக்கணக்கான ரயில் சேவையை ரத்து செய்துள்ளது; விமான பயணங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன; புது டெல்லி நகரத்தில் பேருந்து சேவை மெட்ரோ ரயில் பயணம் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து வாடகை வாகன போக்குவரத்து இணைய சேவை உள்ளிட்ட அனைத்தையும் முடக்கி அப்பட்டமான ஜனநாயக விரோத போக்கை மேற்கொண்டுள்ளது.

அரை இலட்சத்திற்கு மேற்பட்ட போலீசாரையும் துணை இராணுவத்தினரையும் களம் இறக்கியுள்ள மோடி அரசு, மாணவர் போராட்டத்தை ஒடுக்கவும் நசுக்கவும் பார்க்கிறது
மாணவர் அமைப்பின் தலைவர்களை விமானத்திற்கு உள்ளேயேச் சென்று கைது செய்யும் அதி தீவிர நடவடிக்கையை புதுடெல்லி காவல்துறை மேற்கொள்வதில் இருந்து மோடி அரசு எந்த அளவிற்கு ஆட்டம் கண்டுள்ளது என்பது தெரிகிறது.



