
நம் நாட்டின் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், அக்டோபர் 10, வெள்ளிக்கிழமை 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்தபோது, , உலகப் பொது அறநூல் திருக்குறளை மேற்கோள் காட்டியது சிறப்புக்குரியது.!
இராமாயணம் வர்ணாசிரமச் சிந்தனையைப் பேசுகிறது;
கீதை பிறப்பின் அடிப்படையிலான வருண வேறுபாட்டை நியாயப்படுத்துகிறது;
சித்தர்களின் சிந்தனைகள் ஆன்மிகத் தேடல்களை முன்னிறுத்துகின்றன.!
ஆனால், உலக சமுதாயத்திற்கான அறநூல் திருக்குறள்’ மனிதன் மனிதனுக்கு அறிவுறுத்தும் அறநெறிகளையும், சமத்துவத்தையும், மாந்தநேயத்தையும் எடுத்துரைக்கிறது.!
மதம், சாதி, மொழி, இனம் ஆகிய எல்லைகளைக் கடந்து, மாந்த இனம் முழுமைக்கும் பொதுவான வாழ்வியல் நெறிகளைப் போதிப்பதே ‘குறளாசான்’ வள்ளுவர் வடித்த திருக்குறளின் தனிச்சிறப்பு.!
பகுத்தறிவும், மாந்தநேயமும், சமத்துவச் சிந்தனையும் மேலோங்க வேண்டிய இக்காலத்தில், திருக்குறளை மேற்கோள் காட்டி…
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு.
என்ற திருக்குறளை வாசித்தது மட்டுமல்ல; அதற்கு தேசிய மொழியில் விளக்கமும் கொடுத்துப் பேசிய நம் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அவர்களுக்கு, மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகத்தின் சார்பில் நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கி-றோம்.!
வாழ்க திருக்குறள்.!
வளர்க பகுத்தறிவு.!
வெல்க மாந்தநேயம்.!
நன்றி.
இக்கண்,
‘பெரியாரின் தொண்டன்’
நாக. பஞ்சு
தலைவர்,
மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகம்.


