Wednesday, November 25, 2026

பப்ளிக் கோல்ட் ஏடிஎம் – ஆர்எச்பி, போனஸ்லிங்க் இடையே ஒத்துழைப்பு!

(தகவல்: தி. காளிதாசன்)

வெகுமதிப் புள்ளிகளைப் பயன்படுத்தி நேரடியாகத் தங்கம் வாங்கும் புதிய வசதி அறிமுகம்!

கோலாலம்பூர், நவ.25-

பப்ளிக் கோல்ட் ஏடிஎம் நிறுவனம், ஆர்எச்பி வங்கி (RHB Bank) மற்றும் போனஸ்லிங்க் (BonusLink) நிறுவனங்களுடன் மேற் கொண்டுள்ள மூலோபாய ஒத்துழைப்பின் மூலம், வாடிக்கையாளர்கள் தங்களுடைய வெகுமதிப் புள்ளிகளைப் பயன்படுத்தி நேரடியாகத் தங்கம் வாங்குவதற்கான புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஒத்துழைப்பின் வாயிலாக, ஆர்எச்பி வாடிக்கையாளர்களும் தகுதியுடைய போனஸ்லிங்க் உறுப்பினர்களும் தாங்கள் சேகரித்துள்ள வெகுமதிப் புள்ளிகளை மின்னணு பணப் பற்றுச்சீட்டுகளாக (E-Voucher) மாற்றி, மலேசியா முழுவதும் உள்ள 170-க்கும் மேற்பட்ட பப்ளிக் கோல்ட் ஏடிஎம் மையங்களில் கிடைக்கும் தங்கப் பொருட்களை வாங்க முடியும்.

இதற்கான இரண்டு தனித்தனி ஒப்பந்தங்-கள், கோலாலம்பூர் டிஆர்எக்ஸ் பகுதியில் அமைந்துள்ள மெனாரா பப்ளிக் கோல்டில் நடைபெற்ற மூலோபாய ஒத்துழைப்பு கையெழுத்திடும் நிகழ்ச்சியில் கையெழுத் திடப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் பப்ளிக் கோல்ட் குழுமத் தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி டத்தோஸ்ரீ லூயிஸ் நங், ஆர்எச்பி வங்கியின் வர்த்தக வங்கிப் பிரிவுத் தலைவர் ஆங்கி நங், போனஸ்லிங்க் நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரி ரோசான் சியோங் உள்ளிட்ட மூன்று நிறுவனங்களின் முக்கியப் பொறுப்பாளர் கள் கலந்து கொண்டனர்.

இந்த ஒத்துழைப்பின் மூலம், வாடிக்கை யாளர்கள் தங்களுடைய அன்றாட கொள்-முதல் நடவடிக்கைகளின் வாயிலாகச் சேகரிக்கும் வெகுமதிப் புள்ளிகளைப் பயன்படுத்தி, இயற்பியல் தங்கத்தை வாங்குவதற்கான கூடுதல் வாய்ப்பு உருவாகியுள்ளது.

குறிப்பாக, மின்னணு பணப் பற்றுச்சீட்டு களாக மாற்றப்படும் வெகுமதிப் புள்ளி களைக் கொண்டு, பப்ளிக் கோல்ட் ஏடிஎம் மையங்களில் கிடைக்கும் தங்கப் பொருட் களை வாங்கலாம். இதற்கான தகுதி மற்றும் நிபந்தனைகள் அந்தந்த நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு உட்பட்டதாகும்.

மலேசியா முழுவதும் பல்வேறு முக்கிய இடங்களில் பப்ளிக் கோல்ட் ஏடிஎம் மையங்-கள் அமைந்துள்ளன. வணிக வளாகங்கள், பல்பொருள் அங்காடிகள், விமான நிலை யங்கள், பப்ளிக் கோல்ட் கிளைகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது இடங்களில் இந்த ஏடிஎம்கள் செயல்பட்டு வருகின்றன.

வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அருகில் உள்ள பப்ளிக் கோல்ட் ஏடிஎம் மையங்களின் இருப்பிடங்களை நிறுவனத்தின் அதிகாரப் பூர்வ இணையத்தளத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

ஆர்எச்பி வங்கியுடனான ஒத்துழைப்பு கடந்த ஜூலை 2026ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில், தற்போது போனஸ்லிங்க் நிறுவனத்துடனான புதிய ஒத்துழைப்பு வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் வெகு-மதி மீட்பு வாய்ப்புகளை வழங்கியுள்ளது.

இதனிடையே, அதிக எண்ணிக்கையிலான தங்க ஏடிஎம்களை நிறுவியமைக்காக, பப்ளிக் கோல்ட் நிறுவனம் 155 ஏடிஎம்களு டன் ‘அதிக எண்ணிக்கையிலான தங்க ஏடிஎம் நிறுவல்கள்’ (Most Gold ATM Deployments) என்ற பிரிவில் கின்னஸ் உலக சாதனை அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

அதனைத் தொடர்ந்து, மலேசியா, இந்தோ-னேசியா மற்றும் துபாய் ஆகிய இடங்களில் அதன் சேவை வலையமைப்பு விரிவடைந்து, தற்போது மொத்தம் 183 தங்க ஏடிஎம்களைக் கொண்டுள்ளது.

தங்கத்தை எளிதாகவும் வசதியாகவும் வாங்குவதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தி வரும் பப்ளிக் கோல்ட், வாடிக்கையாளர்களின் வெகுமதிப் புள்ளிகளையும் தங்கச் சேமிப்புக்கான வாய்ப்பாக மாற்றும் புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை