Monday, October 12, 2026

இஸ்லாம் அல்லாதோர் சமய இலாகா: -இந்து தர்ம மாமன்றம் கோரிக்கை!

இஸ்லாம் அல்லாதோர் சமய இலாகா நிறுவப்பட வேண்டும் என்றும் இஸ்லாம் அல்லாதோர் வழிபாட்டுத் தலங்களுக்கான பராமரிப்பு நிதி நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கப்பட மீண்டும் என்றும் மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் சார்பில் பிரதமர் துறை சமய இலாக்காவிற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில், இஸ்லாம் அல்லாத சமய – சமூகங்களின் விவகாரங்களை மேலும் திறம்பட ஒருங்கிணைப்பதற்கும் அரசாங்க உதவியை முறையாக வழங்குவதற்கும் பிரதமர் துறையின்கீழ் இஸ்லாம் அல்லாதோரின் சமய விவகாரங்களுக்குத் தீர்வு காண்பதற்கும் இது தோதாக அமையும் என்று மலேசிய இந்து தர்ம மாமன்றத் தலைவர் ரிஷிக்குமார் வடிவேலு இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நீதி, சமய நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில், ‘மலேசிய மடானி’ இலட்சியங்களுக்கு இணங்க இம்முன்மொழிவு உரிய கவனத்துடன் பரிசீலிக்கப்படும் என மாமன்றம் நம்புகிறது ரிஷிகுமார் வடிவேலு
மேலும் தெரிவித்துள்ளார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை