Saturday, October 17, 2026

சங்குக்குள் அடங்கிய கங்கை வெள்ளம்!

கண்ணதாசன், சொல்வணணதாசன் !

தமிழ்ச் சொற்களுக்கு வண்ணம்பூசி மிளிர வைத்தவர் கவியரசர் கண்ணதாசன்; அவர்
மறைந்து 45 ஆண்டுகள் கடந்தும் தமிழர்தம் மனச்சுவற்றில் பதிந்ந்து நிற்கிறார்.

அக்கவிமகனுக்கு கோடம்பாக்கத்தில் மட்டுமல்ல; தமிழர்கள் வாழும்பாக்கம் எங்கெங்கும் நிலைத்து புகழண்டு

அவன் எழுதிய காகிதங்கள் மஞ்சள் நிறமாகலாம்.
அவன் வாழ்ந்த காலம் வரலாறாகலாம்.
ஆனால் அவன் எழுதிய வார்த்தைகள் மனிதர்களின் வாழ்க்கையோடு இரண்டற கலந்து நிற்கின்றன!அத்தகைய மாகவிமகனுக்கு ஒருபோதும் மறைவில்லை.

கண்ணதாசன், பாடல்களை மட்டும் புனையவில்லை; மனித மனத்தின் மொழியை-உணர்வை இழையூட்டி எழுதியவர்.

காதல் கொண்டவனின் கனவையும், காதலில் தோற்றவனின் கண்ணீரையும், தாயின் வேதனையையும் தன் பேனா முனைவழி பட்டவர்த்தனமாக பதிவிறக்கம் செய்தவன் கண்ணதாசன்

வாழ்க்கையின் இன்ப துன்பங்களை எளிய தமிழில் கவிதையாக்கிய மாபெரும் கலைஞர் அவர்.
அன்பு, நட்பு, காதல், ஆன்மிகம், தத்துவம் என மனித வாழ்வின் அனைத்து பரிமாணங்களையும் தனது எழுத்தில் பதிவு செய்த கவிஞர் கண்ணதாசன், தமிழரின் இதயங்களில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

திரைப்படப் பாடல்களில் அவர் வடித்த வரிகள் வெறும் பாடல்கள் அல்ல; அவை வாழ்க்கையைப் புரிந்துகொள்ளும் பாடங்களாகவும் விளங்குகின்றன.
“மனிதன் என்பவன் தெய்வமாகலாம்” என்று மனிதநேயத்தை விதைத்ததும், “வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்” என்று நம்பிக்கையை ஊட்டியதும் அவரது கவிதைகளே.

காலம் கடந்தாலும் அவரது வரிகள் புதுமை குன்றாமல் மக்களின் உதடுகளிலும் உள்ளங்களிலும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.

இந்த நினைவு நாளில், கவியரசின் படைப்புகளை வாசித்து அவரது சிந்தனைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதே அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதையாகும்.

“கவியரசு உடலால் மறைந்தாலும், அவர் எழுதிய கவிதைகள் தமிழ் வாழும் வரை நிலைத்து நிற்கும்.”
.
வாழ்க தமிழ்!

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை