
கடந்த அக்டோபர் மாதம் 29 தேதி அன்று சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 9 மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிக்க சென்றபோது வங்கக் கடலில் ஏற்பட்ட முரசு புயலின் காரணமாக படகு கவிழ்ந்து மீனவர்கள் பலியாகி உள்ளனர்.
இதற்கு ஒன்றிய பாஜக- மாநில தவெக அரசுகளின் மெத்தனப் போக்கே காரணம்
முரசு புயல் காரணமாக காற்றழுத்தம் வலுவடைந்து வருவதை வானிலை ஆய்வு மையம் அறிவித்தவுடன் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் கரைதிருப்ப வேண்டும் என்று அறிவித்து விட்டு தங்கள் கடமை முடிந்தது என்று அரசுகள் மெத்தனமாக இருந்து விட்டன.
இதுபோன்ற காலங்களில் போர்க்கால அடிப்படையில் துரிதமாக செயல்பட்டு சென்னை தலைமைச் செயலகத்திற்கு அருகிலே இருக்கும் இந்திய கடலோர பாதுகாப்பு படை தலைமையகத்தையும் தாம்பரம் விமானப் படை தலைமையகத்தின் உதவியையும் நாடி மீனவர்களின் ஜீபியஸ் கருவி, சீ டாட் கருவி அல்லது கைபேசி அலைவரிசை மூலம் சேட்டிலைட் வான்நோக்கி மூலம் இருக்கும் இடத்தை கண்டறிந்து மீனவர்கள் கரைசேர்வதை மத்திய மாநில அரசுகள் உறுதிப் படுத்தி இருக்க வேண்டும்
குதிரை ஒடியபின் லாயத்தை மூடுவதைப் போன்று முரசு புயலில் சிக்கி சூர்யா, மோகன், முருகன், விஜயகாந்த், குப்புசாமி, அரவிந்தன், குப்புசாமி, ஆகிய ஏழு மீனவர்கள் சாவைத் தழுவி எஞ்சிய நாராயணன், ராஜேஷ் ஆகிய இரண்டு பேரின் நிலைமை என்ன என்று தெரியாமல் அந்த குடும்பங்கள் நிர்க்கதியாக இருக்கும் போது ஏற்படும் கொந்தளிப்பு உணர்வுகளை ஜனநாயகப் பூர்வமாக அணுகாமல் காவல்துறையை ஏவி அடக்குமுறையை கையாள்வது மற்றொரு பிரச்சினைக்கு வழிவகுக்கும்

விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் முக்கண் முதல்வன் சிவ பெருமானையே சங்கறுப்பது எங்கள் குலம் சங்கரனாருக்கு ஏது குலம் சங்கை அரிந்துண்டு வாழ்வோம் அரனே உன் போல் இரந்துண்டு வாழ மாட்டோம் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற முத்தமிழ் சங்கத்தின் தலைமைப் புலவர் நக்கீரரின் வாரிசுகள் என்பதை ஆட்சியாளர்கள் உணரவேண்டும்
மீனவர்கள் தானே என்று இடதுகை அணுகுமுறை மேற்கொண்டு இறந்த குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கினால் அமைதியாகி விடுவார்கள் என்று கருதிவிட வேண்டாம்
ஏற்பட்ட பேரிழப்பிற்கு நிவராணம் என்ன? இனி இது போன்று நடவாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? என்று மீனவர் சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்து பேசி தீர்வைக் காண தமிழ் நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசை திராவிட வெற்றிக் கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
என்றும் மறுமலர்ச்சிப் பாதையில்
மல்லை சி ஏ சத்யா
தலைவர்
திராவிட வெற்றிக் கழகம்
07/11/2026


