
தீபத்திருநாளைக் கொண்டாடும் மலேசிய னவாழ் இந்துப் பெருமக்கள் அனைவருக்கும்
மஇகா தேசியத் தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தமது இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்து கொண்டுள்ளார்
இந்த ஒளிவிளக்குப் பண்டிகை, மலேசிய இந்திய சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு, குறிப்பாக இந்திய சமுதாயத்தின் கல்வி மறுமலர்ச்சி, பொருளாதார மேம்பாடு, வளப்பமான சமூகக் கட்டமைப்பு ஆகியவற்றுக்கு கட்டியம் கூறுவதாக அமைய வேண்டும்.
இந்திய சமுதாயத்தின் நலனுக்காக ம.இ.கா என்றும் துணை நிற்கும் என்பதில் துளியள-வும் சந்தேகமில்லை. இதற்கு முக்கிய சான்றாக இந்திய மாணவர்களின் கல்விக்கு அடித்தளம் அமைத்து வரும் ம..இ.காவின்
MIED-ஏய்ம்ஸ்ட் கல்வி கழகங்களை குறிப்பிட்டு சொல்லலாம்.
உயர்க்கல்வி ஒன்றுதான், நம் சமுதாயத்தைக் காக்கவல்ல ஒரே ஆயுதம் என்பதால்தான், ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான வெள்ளியை நம் சமுதாய மாணவர்களின் நலன் கருதி எம்.ஐ.இ.டி. மூலம் கல்வி உதவிநிதியாகவும் கடனாகவும் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தீபாவளிப் பண்டிகையை நாம் அனைவரும் முழு ஈடுபாட்டுடன் கொண்டாட வேண்டும்.
நம்மிடையே ஒற்றுமையையும் ஒருமைப் பாட்டையும் வலுப்படுத்துவதற்கு இந்தத் தீபத் திருநாள் மிகமிக அவசியம்; நமது சமயம், பாரம்பரியத்தை வழிவழியாக கட்டிக்காப்பதற்கும் இத்தகைய பண்டிகை கள் துணைபுரியும் என்று தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் சொன்னார்.
இந்துக்கள் அனைவரும் குடும்பத்தோடு மகிழ்ச்சியுடன் இந்த தீபாவளி பண்டிகையை
கொண்டாட தான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் தமது தீபாவளிப நல்வாழ்த்தைத் தெரிவித்துக் கொண்டார்.


