Tuesday, November 10, 2026

அரசுப் பணிகளில் இந்தியர்கள் அதிகம் சேர வேண்டும்: -அந்தோனி லோக்

இந்திய இளைஞர்கள் அரசுப் பணிகளில் அக்கறை காட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து அமைச்சு தமிழ் ஊடக நண்பர்களுடன் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தது.

அதில் கலந்து கொண்ட இப்போதுதான் போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் இந்த ஆலோசனையை முன் வைத்தார்.

ஊடக நண்பர்களுடனான உறவை மேலும் வலுப்படுத்தவும் அவர்களுடன் அணுக்கமாக உரையாடவும் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது.

போக்குவரத்து அமைச்சகத்தின்கீழ் பல பிரிவுகளும் 20-க்கும் மேற்பட்ட முகமைகளும் செயல்படுவதால், ஊடகங்களுடன் அடிக்கடி எங்களுடன் தொடர்பு ஏற்படுகிறது.

அந்த உறவை அதிகாரபூர்வ நிகழ்வுகளுக்கு அப்பாலும் வளர்ப்பது இந்நிகழ்வின் நோக்கமாக அமைந்தது.

அரசுப் பணிகளில் இந்திய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாகப் பங்கேற்க வேண்டும் என்றும், திறமை, கல்வி அடிப்படையில் அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அந்தோனி லோக் வலியுறுத்தினார்.

இந்திய சமூகத்திற்கு முன்னுதாரணமாக டத்தோஸ்ரீ ஜனா சந்திரன் இருக்கிறார். கடல்சார் துறையில் முனைவர் பட்டம்பெற்ற இவர், நிபுணத்துவப் பொறுப்பில் நியமிக்கப் பட்டு, பொறுப்பான அதிகாரியாக செயல்படு கிறார் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை போக்குவரத்து துறை தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ ஜனா சந்திரன் ஏற்பாடு செய்திருந்தார்

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை