Thursday, November 26, 2026

பிரிமாஸ் தேர்தல்: டாக்டர் சீனு தலைமையில் புதிய நிருவாகம்!

மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கம்-பிரிமாஸ் அமைப்பின் இருபத்து ஆறாம் ஆண்டுக் கூட்டம் சுபாங் ஜெயா டோர் செட் மண்டபத்தில் நேற்று நவம்பர் 25 புதன்கிழமை நடைபெற்றது.

காலை 11:00 மணி அளவில் தொடங்கிய இந்தக் கூட்டத்தில் உணவகத் தொழில் தொடர்பான விளம்பர- விற்பனைக் கூடாரங்கள் ஏராளமாக அமைக்கப்பட்டிருந்தன.

பகல் உணவிற்குப்பின் 2:00 மணி அளவில் பிரிமாஸ் அமைப்பின் கௌரவ செயலாளர் என். சண்முகம் கூட்டத்தை முறைப்படி தொடங்கினார்.

அடுத்து அலுவல் பூர்வமான இரண்டாம் அங்கம் தொடர்ந்தது.

பிரிமாஸ் அமைப்பின் புரவலரும் ஆலோசகருமான தான்ஸ்ரீ ரெனா. துரைசிங்கம், கௌரவ தலைவரும் தோற்றுனருமான ரெனா. இராமலிங்கம் ஆகியோர் முன்னிலையிலும் பிரிமாஸ் நடப்புத் தலைவர் ஜி. கோவிந்தசாமி (எ) சுரேஷ் தலைமையிலும் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

நிறைவாக, இது தேர்தல் ஆண்டு என்பதால் புதிய நிர்வாகத்திற்கான தேர்தல் நடைபெற்றது.

இதில், பிரிமாஸ் நடப்பு துணைத் தலைவர் சி. கிருஷ்ணன் தலைமையில் ஓர் அணியும் (Team 1) சங்கத்தின் நடப்பு உதவித் தலைவர் சின்னையா என்கின்ற டாக்டர் சீனு தலைமையில் இன்னோர் அணியும்
(Team 2) களம் இறங்கின.

கிருஷ்ணன் தலைமையிலான அணியில் துணைத் தலைவர் பதவிக்கு டத்தோஸ்ரீ இராமநாதனும் உதவித் தலைவர் பதவிக்கு கே விஜய பெருமாளும் கௌரவ செயலாளர் பொறுப்பிற்கு பி ரவின்குமாரும் பொருளாளர் பதவிக்கு நடப்பு பொருளாளர் கு. செல்வராஜும் போட்டியிட்டனர்.

அதைப்போல, டாக்டர் சீனு தலைமையில் துணைத் தலைவர் பதவிக்கு நடப்பு கௌரவ செயலாளர் என், சண்முகம், உதவித் தலைவர் பொறுப்பிற்கு மகாலிங்கம் கருப்பையா, கௌரவ செயலாளர் பொறுப்பிற்கு தயாளன் பாலகிருஷ்ணன், கௌரவ பொருளாளர் பதவிக்கு பூபாலன் துரைசாமி ஆகியோர் போட்டியிட்டனர்.

இவர்களில் சின்னையா (எ) டாக்டர் சீனு 74 வாக்குகள் பெற்று புதிய தலைவரானார். எதிரணியில் போட்டியிட்ட சி. கிருஷ்ணன் 64 வாக்குகளை பெற்றார்.

துணைத் தலைவராக என். சண்முகம் 93 வாக்குகள் பெற்று வென்றார். அவரை எதிர்த்து களமாடிய டத்தோஸ்ரீ ராமநாதன் 64 வாக்குகளை மட்டுமே பெற்றார்.

உதவித் தலைவர் பொறுப்பிற்கு போட்டியிட்ட விஜய பெருமாளும் மகாலிங்கம் கருப்பையாவும் ஆளுக்கு 83 வாக்குகள் பெற்று சம நிலையை அடைந்தனர்.

கௌரவ செயலாளராக டாக்டர் சீனு அணியைச் சேர்ந்த தயாளன் பாலகிருஷ்ணன் 81 வாக்குகள் பெற்று வென்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட பிரவீன் குமாரை விட நான்கு வாக்குகள் கூடுதலாக பெற்றார்.

அதைப்போல,கௌரவ பொருளாளருக்கு
போட்டியிட்ட நடப்பு பொருளாளர் கு. செல்வராஜ் 77 வாக்குகள் பெற்ற வேளையில் டாக்டர் சீனு அணியைச் சேர்ந்த தயாளன் பாலகிருஷ்ணன் 79 வாக்குகள் பெற்றார்.

170-க்கு மேற்பட்ட வாக்குகளில் 160-க்கு மேற்பட்ட வாக்குகள் பதிவாகின.

மொத்தத்தில் டாக்டர் சீனு அணியை சேர்ந்த நால்வர் பெரும்பான்மையில் வெற்றி பெற்ற வேளையில் உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர்கள் மட்டும் சம வாக்குகளை பெற்றதால் ஸ்ரீ கிருஷ்ணன் அணியைச் சேர்ந்த விஜய பெருமாள் தான் விட்டுக் கொடுப்பதாக அறிவித்தார்.

ஆக 2026 ஆம் ஆண்டில் அமைந்த பிரிமாஸ் புதிய நிர்வாகத்தில் டாக்டர் சீனு அணியை சேர்ந்த அனைவரும் வெற்றி பெற்றனர்.

துணைத் தலைவராக வெற்றிபெற்ற என் சண்முகம் மிகப் பெரும்பான்மையில் 29 வாக்குகள் வேறுபாட்டில் வெற்றி பெற்றார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை