Thursday, November 26, 2026

கோலாலம்பூர் மாநகர் மன்றம் அறிவிப்பு: -மூத்த குடிமக்களுக்கு இலவச தகனச் சேவை! -பி.பிரபாகரன் வரவேற்பு!!

(தகவல் தி. காளிதாசன்)

கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் (DBKL) 2027ஆம் ஆண்டுக்கான வெ.3.30 பில்லியன் நிதிநிலை அறிக்கை, மக்கள் நலனையும் அனைவரையும் உள்ளடக்கிய நகர்ப்புற வளர்ச்சியையும் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் வரவேற்றுள்ளார்.

கடந்த ஆண்டைக் காட்டிலும் 6.15 விழுக்காடு அதிகரித்துள்ள இந்த நிதிநிலை அறிக்கையில், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இலவச தகனச் சேவை வழங்கும் திட்டம் முக்கியமானதாகும்.

வாழ்க்கைச் செலவு அதிகரித்து வரும் சூழலில், இறுதிச் சடங்குகளுக்கான செலவைக் குறைத்து, துயரத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு இந்தத் திட்டம் பெரும் நிவாரணமாக அமையும். குறிப்பாக, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இது உதவியாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், பொதுவீடுகள் மற்றும் மக்கள் வீட்டுத் திட்டங்களின் பராமரிப்புக்காக RM254.4 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களுக் காக 2,817 வீடுகளைக் கொண்ட நான்கு ருமா மஜ்லிஸ் திட்டங்களும் மாதம் RM1,000 வாடகையில் செயல்படுத்தப்படவுள்ளன.

குழந்தைகள், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பொழுது போக்கு வசதிகளை மேம்படுத்த RM7 மில்லியனும், மூத்த குடிமக்களுக்கான இரு பகல்நேர பராமரிப்பு மையங்களுக்கு RM4.5 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், MYSchoolBus@Wilayah திட்டத்தின் மூலம் குறைந்த விலை வீட்டுவசதிப் பகுதிகளைச் சேர்ந்த 6,028 மாணவர்கள் பயனடையும் வகையில் RM7.28 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற பாதுகாப்பை மேம்படுத்த சாலைப் பராமரிப்பு, வெள்ளத் தடுப்பு மற்றும் நிலச் சரிவு கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு RM292.5 மில்லியனும், வெள்ளப் பிரச்சினை களைக் கையாள நீர்நிலைகள் மற்றும் ஆறுகளைப் பராமரிக்க RM46.4 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், 22 கிலோமீட்டர் நடைபாதைகளை அமைக்க RM55 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது ஆரோக்கியமான நகர்ப்புற வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.

இந்த நிதிநிலை அறிக்கை வெறும் நிதி ஒதுக்கீடு மட்டுமல்ல; அனைவரையும் உள்ளடக்கிய, பாதுகாப்பான மற்றும் மக்கள் நலன் சார்ந்த மாநகரத்தை உருவாக்கு-வதற்கான திட்டமாகும்.

இத்திட்டங்கள் அனைத்தும் வெளிப்படை-யாகவும் விரைவாகவும் செயல்படுத்தப் படுவதை உறுதிசெய்ய பத்து நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் DBKL-உடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்ப தாகவும் பி.பிரபாகரன் தெரிவித்தார்.

இதற்கிடையே, பிரதமர் துறையின் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் அனா யோ மற்றும் கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கும் அவர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை