Monday, April 20, 2026

இந்தியாவின் ஜனநாயக மாண்பை மோடி வெளிநாடுகளில் அடைமானம் வைக்கிறார்: தமிழ்நாட்டு மஜக தலைவர் தமீமுன் அன்சாரி

உள்நாட்டில் மக்களின் ஜனநாயக உரிமைகளை பிரதமர் மோடி பறிக்கிறார் என்றும் இந்தியாவின் ஜனநாயக மாண்பை வெளிநாடுகளில் அடைமானம் வைக்கிறார் என்றும் தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவர் மு. தமிமுன் அன்சாரி கூறினார்.

தமிழ் நாட்டின் ஒருங்கிணைந்த கல்வி மறுமலர்ச்சியை தடுக்கவும் கல்வி உரிமையைப் பறிக்கவுகும் முனைப்பு காட்டிவரும் இந்திய ஒன்றிய அரசுக்கு எதிராக திமுக கூட்டணி சார்பில் இன்று பிப்ரவரி 18-இல் சென்னை மண்ணடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட மேடையில் கலந்து கொண்டு பேசியபொழுது தமிழ்நாட்டு சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான மு. தமிமுன் அன்சாரி கூறினார்.

2,151 கோடி ரூபாய் நிதிக்காக தமிழ் இனத்தின் 5 ஆயிர ஆண்டு கால மொழியுரிமையை அடைமானம் வைக்க முடியாது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை