Monday, April 20, 2026

திருப்பூரில் ஆர்ப்பரிப்பு!

ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக முழக்கம் !

மஜகவின் 10 ஆண்டு தொடக்க விழாபொதுக்கூட்டத்தில் தமிழ்நாட்டின் மக்கள் ஜனநாயக கட்சியின ஆர்ப்பரிப்பு!

மனிதநேய ஜனநாயக கட்சி(மஜக)யின் 10 ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் திருப்பூரில் நேற்று பிப்ரவரி 23ஆம் நாள் நடைபெற்னது.

மாவட்டச் செயலாளர் ராயல் ராஜா தலைமையில் நடைபெற்ற இப்பொதுக் கூட்டத்தில் தலைவர் மு.தமிமுன் அன்சாரி, பொதுச் செயலாளர் எம். முகமது நாசர், இணைப் பொதுச்செயலாளர் கேப்டன் சையது முகமது பாரூக், துணைத் தலைவர் மண்ணை செல்லச்சாமி, துணைப் பொதுச்செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன் மாநிலச் செயலாளர் கோவை. ஜாபர் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றனர்.

மேடை நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் ஒன்றிய அரசின் இந்தி திணிப்புக்கு எதிராகவும், ஒன்றியத்தின் மும்மொழி கொள்கைகக்கு எதிராகவும் அனைவரும் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்து முழங்கம் எழுப்பினர்.

அனைவரும் எழுந்து நின்று தங்களின் அலைபேசி விளக்குகளையும் ஒளிரவிட்டு முழக்கங்களை தொடர்ந்தனர்.

இது கூட்டத்தின் போக்கில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது.

இப் பொதுக்கூட்டத்தில் தோழமை கட்சி பிரதிநிதிகளும்,பல்வேறு சமூக ஆளுமைகளும் உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.

தகவல் :
மஜக தகவல் தொழில்நுட்ப அணி, திருப்பூர் மாவட்டம்

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை