
மும்மொழி கொள்கை விவகாரத்தில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பேசிய கருத்து அவரின் அரசியல் போக்கை வெளிப்படுத்தியிருக்கிறது என்று மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மு. தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்
இந்தத் திணிப்பை காத்திரமான வார்த்தைகளில் அவர் எதிர்ப்பார் என்று நினைத்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி இருக்கிறது .
ஒன்றிய அரசின் இந்தித் திணிப்பையும், தமிழ்நாட்டு அரசின் இந்தி எதிர்ப்பையும் சமப்படுத்தும் வகையில் இதை LKG – UKG சண்டை என கேலி செய்திருக்கிறார்.

பிரச்சினையின் வீரியத்தை மட்டுப்படுத்தி, அநீதியையும் – நீதியையும் சமப்படுத்தும் நுட்பமான தந்திரத்தை விஜய் கையாண்டிருக்கிறார் .
அடக்கு முறையை ஏவுபவனும் அடக்குமுறை எதிர்ப்பவனும் ஒன்று அல்ல என்பது விஜய்க்கு தெரியாதா ?
மீண்டும் பாசிசம், பாயாசம் என்று கிண்டல் செய்து இருக்கிறார்.
ஃபாசிசத்தில் விஷம் இருக்கிறது; பாயாசத்தில் இனிப்பு இருக்கிறது என்பதை அவர் புரிந்துக் கொள்ள வேண்டும்.
அவர் கொள்கை எதிரி என்று யாரை சொல்கிறாரோ அவர்களிடம் பணிவன்பை வெளிக்காட்டுகிறார்.
அரசியல் எதிரி என சுட்டிக்காட்டிய திமுகவின் கொள்கைகளை பலவீனப்படுத்த முயல்கிறார் என்று இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதி முன்னாள் மக்கள் பிரதிநிதியுமான அன்சாரி தெரிவித்திருக்கிறார்.


