
இன்று மார்ச் திங்கள் முதல் நாள் சனிக்கிழமை மாலையில் கோலாலம்பூர் டான்ஸ்ரீ கே.ஆர். சோமா அரங்கில் இனிமையான காதல்-தத்துவ பாடல்களுடன் ஆடலும்கூடிய கலை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
‘சங்கீதம் சந்தோசம்’ என்னும் அமைப்பின் சார்பில் இந்தக் கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நினைத்ததை முடித்தவன் என்னும் பெயரில் நடைபெற உள்ள இந்த கலை நிகழ்ச்சியின் ஏற்பட்டு குழுத் தலைவர் ஜே ஜே ஜென்.
எம்ஜிஆர் ஹரி, தர்ஷினி, ஹரிப்ரியா உள்ளிட்ட கலைஞர்கள் பங்குபெறும் இந்த ‘நினைத்ததை முடித்தவன்’ எம்ஜிஆர் கலை நிகழ்ச்சி, கண்ணுக்கும் காதுக்கும் விருந்தாக அமையும். அதற்கு முன், வயிற்றுக்கும் விருந்தளிக்கப்படும்.

தலைநகரில் உள்ள கலை ஆர்வலர்களையும் எம்ஜிஆர் ரசிகர்களையும் ரவீந்திரன் கணபதி தலைமையிலான ஏற்பாட்டுக் குழுவினர் இருகரம் கூப்பி வரவேற்கின்றனர்.


