
புனித நோன்பு மாதத்தை முன்னிட்டு ஸ்தாப்பாக் அஸ்னாப் மதராசா ஃபரிடியா 2500 குடும்பங்களுக்கு உணவுக் குடைகளை வழங்கியது.
இன்று மாலை நோன்பு திறப்பு விழாவில் இந்த உணவுக் கூடைகள் நேரடியாக வழங்கப்பட்டன.
மலேசிய முஸ்லிம் உணவக உரிமையாளர் சங்கத் தலைவர் டத்தோ ஜவகர் அலி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வெ.ஐந்து லட்சம் மதிப்புடைய உணவுக் கூடைகள் வழங்கப்பட்டன
பிரஸ்மா அமைப்பு இந்த உணவுக்கூடைகளை தங்கள் உறுப்பினர்கள் மூலமாக அன்பளிப்பு செய்ததாக அவர் சொன்னார்.

மேலவை முன்னாள் துணை சபாநாயகர் அப்துல் ஹலிம் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்.
உணவுக் கூடைகளே பெற்றுக் கொண்ட மக்கள் பெரும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
1994-ஆம் ஆண்டு முதல் மதராசா ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து உணவுக் கூடைகளை வழங்கி பேருதவி செய்து வருவது குறிப்பிடத்தக்கது
நாட்டில் புகழ்பெற்ற Nestle, F&N, Gardenia உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த நிகழ்ச்சி வெற்றி பெற ஆதரவுக்கரம் நீட்டியதாக ஜவகர் சொன்னார்.
பேறு குறைந்தவர்கள் இந்த நிகழ்வில் முன்னுரிமை பெற்றனர். வங்சா மாஜு, ஸ்தாப்பாக் சுற்று வட்டத்தை சேர்ந்த மக்கள் இதன் மூலம் நன்மை அடைந்தனர்.

கடந்த 1986 ஆம் ஆண்டு முதல் இந்த மதரசா சிறப்பாக இயங்கி வருகிறது.
எகிப்து, ஏமன், இந்தியா போன்ற நாடுகளில் தாஃபிஸ் பள்ளிக் குழந்தைகள் உயர்க்கல்வி பெற இந்த மதரசா பேருதவி புரிந்துள்ளது.
இன்றைய நிகழ்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து சிறப்பித்தனர்.


