
கோலாலம்பூர், ‘மஸ்ஜிட் இந்தியா’ பகுதியில் உள்ள அருள்மிகு தேவி பத்ரகாளியம்மன் கோவில் விவகாரம் தொடர்பாக பொய்யான தகவலை பரப்ப வேண்டாம் என்று பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த 8 மாதங்களாக ஆலய நிர்வாகத்துடன் இந்த விவகாரம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறேன்.
ஆனால் நான் ஒருபோதும் சந்திக்கவில்லை என்று சொல்வது தவறாகும்.

இந்தக் கோவில் பிரச்சனைக்கு ஒரு தெளிவான விடை கிடைக்கும் என நான் பெரிதும் எதிர்ப்பார்க்கும் தறுவாயில், மக்கள் பொறுமை காக்க வேண்டுமென கேட்டுக் கொள்கின்றேன்.
கோவில் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
எந்தத் தரப்புக்கும் பாதகம் இல்லாமல் இதற்குத் தீர்வு காணப்பட வேண்டும்.

‘டிக் டாக்’ உள்ளிட்ட சமூக ஊடகத்தில் இந்தக் கோவில் பிரச்சினை குறித்து தவறான செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இதை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.


