Wednesday, July 15, 2026

அருள்மிகு மகாமாரியம்மன் கோயில் தேவஸ்தான வாரிய உறுப்பினர் பெ. சந்திரசேகரனின் தாயார் காலமானார்!

கோலாலம்பூர் அருள்மிகு மகாமாரியம்மன் கோயில் தேவஸ்தான வைகாசி உபய வாரிய உறுப்பினரான பெ. சந்திரசேகரனின் அன்புத் தாயார் திருமதி லெட்சுமி ஆறுமுகம் காலமானார்.

அன்னாரின் இறுதிச் சடங்குகள் காஜாங்கில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றன. இதில் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என திரளானோர் கலந்துகொண்டு இறுதி மரியாதையைச் செலுத்தினர்.

இந்நிகழ்வில் மனோ, யோகேஸ்வரன், பூக்கடை சந்திரன் மற்றும் மக்கள் ஓசை புகைப்படக்காரர் மலையாண்டி ஆகியோர் நேரில் கலந்துகொண்டு, அன்னாரது நல்லுடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும், தாயாரை பிரிந்து துயரத்தில் ஆழ்ந்திருக்கும் நண்பர் பெ. சந்திரசேகரனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தங்களின் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டனர்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை