
ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் பக்கத்தான் ஹராப்பான் படுதோல்வியை சந்தித்துள்ளது
தேசிய முன்னணி 48 இடங்களில் அமோக வெற்றி பெற்ற வேளையில் பக்கத்தான் ஹராப்பான் 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று அதிர்ச்சியை எதிர்கொண்டு உள்ளது.
இந்நிலையில் ஸ்கூடாய் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட ஜசெக வேட்பாளர் கார்த்தியாயினி ஜெயபாலன் அமோக வெற்றி பெற்றார்.
இந்த தேர்தலில் ஜசெக 6 இடங்களில் வெற்றிபெற்ற வேளையில் கெஅடிலான ஊத ம் மற்றும் அமானாவும் ஒவ்வோர் இடத்தில் வெற்றி பெற்றன.
ஜொகூர் மாநில சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமரும் பக்கத்தான் ஹராப்பான் சார்பில் யார் எதிர்க் கட்சி தலைவர் என்ற கேள்வி எழுகிறது.
ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் இந்தியர்களின் ஆதரவை இழந்து விட்டது.
மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெற டிஏபி ஜோகூர் உடனடியாக தலைமை மாற்றத்தை மேற்கொள்ள வேண்டும் என்று ஜசெக முன்னாள் உறுப்பினர் சந்திரசேகரன் ஆறுமுகம் தெரிவித்துள்ளார். .
மேலும், ஜோகூர் மாநில சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி, ஸ்கூடாய் சட்டமன்ற உறுப்பினர் கார்த்தியாயினி ஜெயபாலனுக்கு வழங்கப்பட வேண்டும்.
சட்டத்துறை பின்னணி கொண்ட அவர் கொண்டுள்ள அர்ப்பணிப்பு- மக்கள் சேவைக்கான உறுதிப்பாடு காரணமாக, எதிர்க்கட்சியை திறம்பட வழிநடத்தி மக்களின் குரலை வலுவாக பிரதிநிதித்துவப்படுத்தும் திறன் கொண்டவர்.
எனவே, டிஏபி ஜோகூரின் எதிர்கால முன்னேற்றத்திற்கும் ஜோகூர் மக்களின் நலனுக்குமான இந்த மாற்றங்களுக்கு, கட்சியின் அனைத்து தலைவர்களும், ஆதரவு வழங்குமாறு கேட்டுக்
கொள்வவயதாக சமூக ஆர்வலருமான
சந்திர சேகரன் தெரிவித்துள்ளார்


