
கோலாலம்பூர் மார்ச் 23-
நாட்டின் பாரம்பரிய தலைநகரமான கோலாலம்பூரில் ஏறக்குறைய 134 ஆண்டுகள் பழைமைவாய்ந்த மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள அருள்மிகு தேவி பத்ரகாளியம்மன் கோவில் இதே இடத்தில் நிலைத்திருக்க வேண்டும் வேண்டும் என்று பினாங்கு மாநில முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் ப. ராமசாமி இன்று வலியுறுத்தினார்.
இந்த கோவிலை இடமாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று உரிமை கட்சியின் தலைவருமான அவர் தெரிவித்தார்.

அருள்மிகு தேவி பத்ரகாளியம்மன் கோவில் அருகில் பள்ளிவாசல் கட்டுவதாக இருந்தால் கட்டி கொள்ளட்டும்.
ஆனால் எந்த காரணமும் இன்றி இந்தக் கோவிலை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இன்று காலையில் அருள்மிகு தேவி பத்ரகாளியம்மன் கோவிலுக்கு வருகை புரிந்த டாக்டர் இராமசாமி கோவில் நிர்வாகத்தை சந்தித்துப் பேசினார்.

உரிமை கட்சியின் சார்பில் தமிழச்சி காமாட்சி, பினாங்கு மாநில சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் சதீஷ் முனியாண்டி, டேவிட் மார்ஷல் உட்பட பல பொறுப்பாளர்களும் இந்த வேளையில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


