
மஇகா தேசியத் தலைவர் தலைமை ஏற்கும் வாய்ப்பை மஇகா கிள்ளான் வட்டாரத்து ‘சாமி ரோடு’கிளை பெற்றது என்று மஇகா தேசிய ஊடகப் பிரிவு தலைவர் எல் சுப்பிரமணியம் தெரிவித்தார்.
மஇகா, கிள்ளான் ‘சாமி சாலை’ கிளையின் 58-ஆவது(2025) ஆண்டுக் கூட்டத்திற்கு மலேசிய இந்தியர் காங்கிரஸ்-ம.இ.கா. தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ டாக்டர் விக்னேஸ்வரன் இன்று தலைமை தாங்கினார்.

மஇகா கிளைகள், கட்சியின் அடிப்படை அமைப்பு என்றும் நம் கட்சியின் சேவை, அடித் தட்டுப் பிரிவினரை சென்றடைவதை உறுதி செய்வதில் மஇகா கிளைகள் ஒரு முக்கிய தளம் என்றும் தலைவர் டான்ஸ்ரீ வலியுறுத்தினார்.

நம் கிளைகள் வலுவாகவும் எதிர்கால சவால்களை எதிர்கொள்ளவும் எப்போதும் தயாராக இருப்பதை உறுதி செய்யுமாறும் கிளைத் தலைவர்களுக்கு அவர் நினைவூட்டினார்.


