Monday, April 27, 2026

கோலாலம்பூர் அருள்மிகு தேவி பத்ரகாளியம்மன் கோயில் ஒரு வரலாற்று அடையாளம்: -டாக்டர் இராமசாமி

கோலாலம்பூர் மார்ச் 24-
மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள அருள்மிகு தேவி பத்ரகாளியம்மன் கோவிலின் வரலாறு குறித்து ம இ கா துணைத் தலைவரும் தாப்பா எம்.பி.யுமான டத்தோஸ்ரீ சரவணன் நேற்று சம்பந்தப்பட்ட ஆலயத்தின் முன்புறத்தில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.

அப்போது இந்தக் கோயில் சட்டவிரோத வழிபாட்டுத்தலம் அல்ல என்பதை தெளிவுபடுத்தினார். தவிர, கோயில் இடமாற்றம் தொடர்பான குழப்பத்தையும் நீக்கியுள்ளார்.

நிலத்தின் ஒரு பகுதி 2008 ஆம் ஆண்டில் கோலாலம்பூர் மாநகர மன்றம் (டி.பி.கே.எல்) சாலை விரிவாக்கத்திற்காக வாங்கியது. கோயில் அப்படியே அங்கேயே இருந்தது. மேலும், நீர் மற்றும் மின்சார சேவைகளை வழங்கியதன் மூலம் கோயிலை டி.பி.கே.எல். அங்கீகரித்திருப்பது உறுதியாகிறது என்றும் அவர் தெளிவுபடுத்தினர்

130 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் ஒரு கோயிலை சட்டவிரோதமானது என்று கருதமுடியாது. மலேசிய இந்து சங்க முன்னாள் தலைவர் டத்தோ அ.வைத்திலிங்கம்கூட சரவணனின் கருத்தை ஆதரித்துள்ளார்.

2008-ஆம் ஆண்டில் கோயில் நிலத்தின் ஒரு சிறிய பகுதி மட்டுமே பாதிக்கப்பட்டது என்பதை சரவணன் வலியுறுத்தினார். சம்பந்தப்பட்ட நிலம் நிலம் குறித்து ஆலய நிர்வாகத்திடம் சொல்லாமலேயே விற்கப்பட்டு அதன் வரலாற்று முக்கியத்துவம் மறைக்கப்பட்டுள்ளது.

இப்போது, ​​பள்ளிவாசல் நிர்மாணிப்பதற்காக ஆலயத்தை இடமாற்றம் செய்யச் சொல்லி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது

மார்ச் 27, 2025 அன்று இந்த ஆலயத்தின் பக்கத்து நிலத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மசூதிக்கான கட்டுமானத்தை துவக்கி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இருப்பினும் டி.பி.கே.எல். நியாயமாக செயல்பட்டு, நிலத்தை RIBI என வகைப்படுத்தியிருந்தால் கோவிலின் சட்டப்பூர்வமான தன்மை குறித்த இந்த முழு சர்ச்சையும் தவிர்க்கப்பட்டிருக்கும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மலேசியாவின் அனைத்து இனங்களுக்கும் – மதங்களுக்கும் உரிய நியாயத்தை நிலைநிறுத்த முன்வர வேண்டும்.

மலேசிய உரிமைக் கட்சியைப் பொறுத்தவரை, அருள்மிகு தேவி பத்ரகாளியம்மன் கோயில் அதே இடத்தில் நிலைக்க வேண்டும்.

தேவைப்பட்டால், அருகே பள்ளிவாசல் கட்டப்படுவதை ஆதரிக்கிறோம் என்று உரிமைக் கட்சியின் தலைவருமான பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி இந்த சிக்கல் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை