Thursday, April 16, 2026

கருப்பசாமி பாண்டியன் மறைவு: முதல்வர் இரங்கல்

தமிழ்நாட்டு சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மறைவு எய்தினார்.

இதன் தொடர்பில் தமிழக முதல்வர் மாண்புமிகு மு. க. ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

1977-இல் ஆலங்குளம், 1980 இல் பாளையங்கோட்டை, 2006 இல் தென்காசி தொகுதிகளில் இருந்து தமிழ்நாட்டு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கருப்பசாமி பாண்டியன் திறம்பட மக்கள் சேவை ஆற்றியவர் என்று தமிழ்நாட்டு முதல் அமைச்சரும் திமுக தலைவருமான மாண்புமிகு மு க ஸ்டாலின் கருப்பசாமி மறைவையொட்டி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் நீண்ட காலம் உறுப்பினராக இருந்த அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் பொருட்டு உடனடியாக இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அவரை இழந்த வாடும் குடும்பத்தினருக்கும் அரசியல் இயக்கங்களைச் சார்ந்த நண்பர்களுக்கும் தன் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாக ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை