Tuesday, April 21, 2026

மார்ச் 28: பாலஸ்தீன ஆதரவுநாள்!

தமிமுன் அன்சாரி பதாகை ஏந்தி முழக்கம்

ஒவ்வோர் ஆண்டும் ரமலான் மாத கடைசி வெள்ளிக்கிழமை ‘அல்குத்ஸ் தினம்’ என்ற பெயரில் பாலஸ்தீன சுதந்திரத்திற்கு ஆதரவாக உலகமெங்கும் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகள் நடைபெறுகின்றன.

ஜனநாயக அமைப்புகளும் போருக்கு எதிரான மனிதநேய இயக்கங்களும் இதை உலகம் முழுக்க முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டின் மனிதநேய ஜனநாயக கட்சியும் இந்த ‘பாலஸ்தீன ஆதரவு நாள்’-ஐக் கடைப்பிடிக்கிறது.

இதனையொட்டி ‘போர் நெருக்கடியில் பரிதவிக்கும் பாலஸ்தீனர்களை ஆதரிப்போம்’ என்ற பதாகையை ஏந்தி மஜக-வினர் சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டும் என அக்கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி வேண்டுகோள் விடுத்தார்.

இன்று அந்த பதாகையை ஏந்தி அவர் வலைதள பரப்புரையை தொடங்கி வைத்தார்.

இன்று காலை முதல் பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்களும், கலை -இலக்கியத் துறையை சேர்ந்தவர்களும், ஊடகத்துறையை சேர்ந்தவர்களும், சமூக ஆளுமைகளும் பதாகை ஏந்தி தங்கள் ஆதரவை நல்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து மஜக-வின் முன்னணி தலைவர்கள், அனைத்து மட்ட நிர்வாகிகள், கிளை அமைப்புகள் இன்று இரவு 10:00 மணிவரை இப்பரப்புரையை முன்னெடுக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

‘இஸ்ரேலிய ஆக்ரமிப்பை எதிர்ப்போம்:
சுதந்திர பாலஸ்தீனத்தை ஆதரிப்போம்’

தகவல் :
மஜக தகவல் தொழில்நுட்பஅணி

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை