Thursday, April 16, 2026

தமிழ்நாட்டு முதல்வருக்கு இந்திய தேசிய முஸ்லிம் லீக் நன்றி!

புது டெல்லியில் ஆரிய ஏகாதி பத்தியத்திற்கு கடந்த 12 ஆண்டுகளாக வழிகோலியுள்ள பாஜக ஆட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வக்ஃபு சட்டத் திருத்த முன்வடிவை திரும்பப்பெற வேண்டும் என்று சமூக நீதி மனம் பரப்பி சமத்துவ நல்லாட்சி நடத்தி வரும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் நிறைவேற்றியதற்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

இதன் தொடர்பில் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே. காதர் மொய்தீன், தமிழ்நாட்டு மாநில பொதுச் செயலாளர் முகமது அபுபக்கர், ஷாஜகான், மாணவரணி செயலாளர் முகமது அஷ்ரத் ஆகியோர் முதலமைச்சர் மு க ஸ்டாலினை நேரில் சந்தித்து நோன்பு மாதம் நிறைவுற இருக்கின்ற இந்த தருணத்தில் இஸ்லாமிய பெருமக்களின் சார்பில் நன்றியறிதலை வெளிப்படுத்தினர்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை