Thursday, April 2, 2026

கட்சியை வலுப்படுத்த இணையுங்கள்!தன் பிறந்த நாள் விழாவில் டத்தோ டாக்டர் லோகபாலா!!

கோலாலம்பூர், ஏப்ரல் 3-
இந்த நாட்டில் பிபிபி கட்சி ஒரு பலமான கட்சியாக உருவெடுக்க தன்னுடன் இணைந்து பாடுபடுங்கள் என்று பிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா கேட்டுக் கொண்டார்

நாடு முழுவதிலும் உள்ள பிபிபி உறுப்பினர்கள் தன்னுடன் தோளோடு தோளாக நின்று கட்சியை வளர்க்க முன்வர வேண்டும் என்றும் அப்போதுதான் பிபிபி கட்சி இந்த நாட்டில் ஒரு பலமான கட்சியாக உருவெடுக்கும் என்றும் லோக பாலா குறிப்பிட்டார்.

தேசிய முன்னணியின் உறுப்பு கட்சியுமான பிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா தன் 59ஆவது வயது பிறந்த நாளை இன்று விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தார்.

சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவர் டாக்டர் சுரேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த விருந்து நிகழ்ச்சி, செந்தூல் வாலை இழை உணவக மண்டபத்தில் நடைபெற்றது.

பிபிபி விலாயா மாநிலத் தலைவர் சத்யா சுதாகரன், சிகாம்பூட் பிபிபி தொகுதித் தலைவர் டத்தோ வினோத், பிபிபி கட்சியின் தகவல் பிரிவு தலைவர் ஸ்டீபன், துணைத் தலைவர் குமார், மகளிர் அணி தலைவி புனிதா முனுசாமி ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

செலாயாங் தொகுதி ஏழுமலை , சிப்பாங் தொகுதி தலைவர் ஜேக்கப், ஜொகூர் மாநில தலைவர் கிருஷ்ணன், காப்பார் தொகுதி தலைவர் கதிர், சுபாங் தொகுதி தலைவர் நந்தா உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

ஓர் அரசியல் இயக்கத்தின் தலைவரான டத்தோ டாக்டர் லோக பாலமோகன், தன் பிறந்தநாள் விழாவின் போது திருடீரென்று பாடகராக உருமாறினார்.

நிகழ்ச்சியின்போது உற்சாகமடைந்த லோகபாலா, புகழ் பெற்ற திரைப்பட பாடல்கள் சிலவற்றைப் பாடி, நிகழ்ச்சியில் திரண்டிருந்த கட்சியினரையும் ஆதரவாளர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை