Tuesday, April 21, 2026

வக்பு சட்டத் திருத்தத்திற்கு எதிராக துண்டறிக்கை – பரப்புரை! ஆ. ராசாவிடம் வழங்கினார் மஜக தலைவர் தமிமுன் அன்சாரி!!

ஏப்ரல்,11:
புதிய வக்பு சட்டத்திற்கு எதிராக ஒரு கோடி மக்களை சந்திக்கும் துண்டறிக்கை பரப்புரையை மனிதநேய ஜனநாயக கட்சி நேற்றைய முன்தினம் முதல் தொடங்கியிருக்கிறது.

அதன் ஒரு பகுதியாக நேற்று மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் மு.தமிமுன் அன்சாரி, திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசாவாய் சந்தித்து துண்டறிக்கையை வழங்கினார்.

அப்போது நாடாளுமன்ற கூட்டுக்குழுவிலும் பின்னர் இச்சட்ட மசோதா விவாதத்துக்கு வந்தபோது நாடாளுமன்றத்திலும் மிகச் சிறப்பாக கருத்தியல் எதிர்ப்பை தெரிவித்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

ராசா வெளிப்படுத்திய கருத்து, திமுகவுக்கும் முதல்வருக்கும் சிறப்பு சேர்க்கும் வகையில் இருந்ததாகவும் அப்போது குறிப்பிட்டார்.

அதன்பிறகு, ஆ.ராசா, தன் உரைகள் அடங்கிய புத்தகங்களையும் அவர் எழுதிய நூல்களையும் தலைவர் மு. தமிமுன் அன்சாரிக்கு பரிசளித்தார்.

புதிய வக்பு சட்டத்திற்கு எதிரான மஜக-வின் துண்டறிக்கை பரப்புரை, பொதுமக்கள தவிர, தலைவர்கள் மற்றும் ஆளுமைகளிடமும் எடுத்துரைக்கும் வகையில் திட்டமிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் :
மஜகதகவல்தொழில்நுட்ப அணி

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை