Tuesday, April 21, 2026

ஆயர் கூனிங் செலாத்தான் வட்டாரத்தில் பவானி வாக்கு வேட்டை!

‘மூன்றாவது அரசியல் சக்தி, நம் சக்தி’என்ற முழக்கத்துடன் மலேசிய சோசலிச கட்சி-பிஎஸ்எம் வேட்பாளர் கே பவானி வாக்குவேட்டை!

ஏப்ரல் 26 ஆம் நாள் நடைபெற உள்ள ஆயர் கூனிங் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பில் இன்று காலையில் ஆயர் கூனிங் செலாத்தான் வட்டாரத்தில் மலேசிய சோசலிசக் கட்சி தொண்டர்கள், ஆதரவாளர்கள் புடைசூழ வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் கே. பவானி

பவானி வாக்கு கேட்டு சென்ற இடத்திலெல்லாம் பொதுமக்களும் வாக்காளர்களும் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

நேற்று சனிக்கிழமை வேட்பு மனுத் தாக்கல் இடம் பெற்றது முதல் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் பவானி, இன்று காலையிலேயே வாக்கு வேட்டையில் இறங்கினார்.

காலை 8:00 மணி முதல்Taman Elok, Rumah Murah, Ayer Kuning Selatan, Ayer Kuning ஆகிய குடியிருப்புப் பகுதிகளில் வாக்கு சேகரிக்கும் கே. பவானி, பதினோரு மணி முதல் மூன்று மணிவரை Coldstream பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

தொடர்ந்து மாலை 5:00 முதல் முன்னிரவு 8:00 மணி வரை Kampung Simpang Tiga வட்டாரத்தில் வாக்கு வேட்டையாட இருக்கிறார்.

அதனை எடுத்து இரவு 10 மணி முதல் டிக் டோக் முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலமாக பொதுமக்களுடனும் வட்டார வாக்காளர்களுடனும் காணொளி காட்சிவழி பிரச்சாரத்தை மேற்கொள்ள இருக்கிறார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை