Saturday, September 19, 2026

செலாயாங் தொகுதி இளைஞர் அணி தலைவராக தமிழரசு வெற்றி!தலைவர் தேர்தலில் சுவா வெய்க் கியாட் அதிர்ச்சி தோல்வி

ரவாங், ஏப்ரல் 13-
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற செலாயாங் தொகுதி கெஅடிலான் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வெய்க் கியாட் அதிர்ச்சி தரும் வகையில் தோல்வி அடைந்தார்.

இவருக்கு 1,648 வாக்குகள் கிடைத்தன. எதிர்த்து போட்டியிட்ட கமாரூடின் 2,041 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

செலாயாங் தொகுதி கெஅடிலான் இளைஞர் அணித் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தமிழரசு தமிழ்க் கலை 348 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இவரை எதிர்த்துப் போட்டியிட்ட தினேஷ் செல்வராஜ் 314 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

கெஅடிலான் கட்சியின் அடிப்படைத் தொண்டராக விளங்கிவரும் ‘டைகர்’ தமிழ்க்கலையின் புதல்வர் தமிழரசு என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை