
சிங்கப்பூரில் கடந்த மே 3 அன்று நடைபெற்ற பொதுத் தேர்தலில், மக்கள் செயல் கட்சி(PAP) மீண்டும் மாபெரும் வெற்றி பெற்று, பிரதமர் பதவியில் தொடரும் சிங்கை பிரதமர் லோரன்ஸ் வோங்கிற்கு தமிழ்நாட்டு மஜக தலைவர் தமிமுன் அன்சாரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1965-ஆம் ஆண்டில் சிங்கப்பூர் உருவானது முதல், தொடர்ந்து 14 முறை வென்று ஆளுங்கட்சியாக மக்கள் செயல் கட்சி நீடித்து வருகிறது.

தலைமுறைகளைக் கடந்து அந்நாட்டு மக்களின் நம்பிக்கையை பெற்று வெற்றிபெறுவது பெறும் சாதனையாக உலக வரலாற்றில் கவனிக்கப்படுகிறது.
அனைத்து சமயங்களுக்கும் சம மரியாதை அளித்து; தமிழர்களுக்கும் தமிழுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அந்நாட்டின் அரசியல் கொள்கை போற்றத்தக்கதாகும்.
அதை மேன்மேலும் செம்மைப்படுத்தும் வகையில் பணியாற்றிடவும் சிங்கப்பூரின் எழில்மிகு பெருமைகளை தொடர்ந்து சிறப்பாக வழிநடத்திடவும் மீண்டும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை சிங்கப்பூர் பிரதமர் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். முதல் முறையாக அக்கட்சிக்கு தலைமை ஏற்று சிறப்பான வெற்றியை பெற்றிருக்கும் பிரதமர் லோரன்ஸ் வோங்கின் புகழ் ஆசிய மண்டலத்தில் நிலைத்திருக்கும் என்றும் மு. தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.


